நிர்மலாதேவிவின் புது ஆடியோவால் மேலும் குழப்பம்.!

breaking
நிர்மலாதேவிதான் தெளிவா இருக்காங்க.. நாமதான் குழம்பி போய்ட்டோம் என்று தெரிகிறது. "எனக்கு மனநிலைமை பாதிக்கப்பட்டிருக்கிறது, என்னை எப்படியாவது மனநல டாக்டர்கிட்ட கூட்டிட்டு போங்க" என்று சம்பந்தப்பட்ட நிர்மலாதேவியே வக்கீலிடம் கேட்டுள்ளார். தைரியமான, படித்த, துணிச்சலான ஒரு பெண்.. அதிலும் பேராசிரியையாக இருந்தவர் நிர்மலாதேவி. ஒன்றரை வருடங்களாக நான்கு சுவற்றுக்குள் அடைக்கப்பட்டார். பல முறை தலைப்பு செய்திகளாக மீடியாவில் இடம் பிடித்து வருபவர். ஒவ்வொரு முறை கோர்ட்டுக்கும் வரும்போதும், போகும்போதும் தமிழக மக்களால் கவனிக்கப்படுபவர். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் எல்லாம் வராத மனநிலை பாதிப்பு, திடீரென முந்தா நாள் வந்துவிட்டது. மனநிலை பாதிக்கப்பட்டவர், கோர்ட்டுக்கு வரும்போது டிப்-டாப்பாக டிரஸ் செய்து வந்ததையும், கழுத்து நிறைய நகைகள், தலை நிறைய பூ வைத்து கொண்டு வந்ததைகூட நாம் பேச வேண்டாம். ஆனால் வீட்டிலிருந்து பொறுமையாக டிரஸ் செய்து கொண்டு கோர்ட்டுக்கு வந்தவர், அங்குதான் வினோதமாக நடக்க தொடங்கினார். அதுவரை நன்றாக இருந்த முடியை வெட்டி காதில் தொங்க விட்டு கொண்டார், பிறகு அவிழ்த்து கொண்டார், காமாட்சி அம்மன் முதல் தர்கா வரை ஒரே நாளில் அருப்புக்கோட்டையை ஆடி போக வைத்து விட்டார். இதனால் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளாரோ, மன அழுத்தத்தினால் இப்படி நடந்து கொண்டுள்ளரோ என்ற சந்தேகமும், குழப்பமும் நமக்கு ஏற்பட்டது. ஆனால் நேற்று நார்மல் மோடுக்கு வந்துவிட்டார். அது மட்டுமில்லை, தனக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது, டாக்டரிடம் கூட்டிச் செல்லுங்கள் என்று அவரே வக்கீலுக்கு போன் செய்து கேட்டுக் கொண்டுள்ளார். "மன்னிச்சுக்குங்க.. கோபமா பேசியிருந்தா மன்னிச்சுக்குங்க.. கொஞ்ச நாளா நான் நானாவே இல்லை. ஆன்மீக ரீதியா இதை பார்க்கிறதானுனு தெரியல. சைக்ரியாட்டிஸ்ட் ட்ரீட்மென்ட் வேணும்னு 2 நாளைக்கு முன்னாடிதான் தஞ்சாவூரில் போய் பார்த்துட்டு வந்தேன். உங்களுக்கு தெரிஞ்ச சைக்ரியாட்டிஸ்ட் கிட்ட என்னை தயவு பண்ணி கூட்டிட்டு போங்க. உடனே கூட்டிட்டு போங்க ப்ளீஸ்.. எங்கியாவது என்னை கூட்டிட்டு போங்க. தினம் தினம் எனக்கு பெரிய பிரச்சனை எல்லாம் வந்துட்டு இருக்கு. நீங்களே பார்த்தீங்க இல்லை, நான் அப்படியெல்லாம் பேசக்கூடியவளா?" என்று கேட்கிறார். உண்மையிலேயே நிர்மலாதேவிக்கு கோர்ட்டுக்கு வந்த ஒருநாள் மட்டும் எப்படி மனநலம் பாதிக்கப்பட்டது? அப்படியே வக்கீல்கிட்ட மருத்துவ உதவி கேட்டாலும், அதை ஏன் இப்படி பேசியதை ரிக்கார்ட் செய்து ஆடியோ வெளியிட வேண்டும்? என்றுதான் புரியவில்லை. எல்லாவற்றிற்கும் மேல் இந்த ஆடியோ உண்மைதானா என்றும் தெரியவில்லை. கடைசியில நாமதான் டாக்டர் கிட்ட போக வேண்டி வரும் போல இருக்கு.