அதிமுகவிற்கு காத்திருக்கும் அதிர்ச்சி.!

breaking
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பிஜேபி கூட்டணி 353 இடங்களை கைப்பற்றி தனி பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது. இதில் பிஜேபி மட்டும் 303 இடங்களில் வெற்றி பெற்றது. மக்களவையில் பிஜேபி தனி பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றினாலும், மாநிலங்களவையில் பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லை. மாநிலங்களவையில் மொத்தம் 245 ராஜ்யசபா எம்.பிக்கள் உள்ளனர். தற்போதைய நிலையில் பாஜகவுக்கு 78 , காங்கிரஸுக்கு 48, அதிமுகவுக்கு 13, திரிணாமுல் காங்கிரஸ்-13, சமாஜ்வாதி 13, பிஜூ ஜனதா -6, சிவசேனா -4, திமுக-3 என்கிற நிலை இருக்கிறது. மாநிலங்களவையில் மசோதாக்கள் நிறைவேற 123 எம்.பிக்கள் இருந்தால் மட்டுமே ஒப்புதல் பெற முடியும். ஆனால் பாஜக கூட்டணிக்கு இந்த பெரும்பான்மை இல்லை என்பதால் பிற கட்சி ராஜ்யசபா எம்.பி.க்களை இழுக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் அதிமுகவின் 7 எம்.பிக்களுக்கு பாஜக குறி வைத்துள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். அதிமுகவில் சர்ச்சைக்குரிய பெண் எம்.பி, கொங்கு மண்டலத்தை சேர்ந்த மூத்த எம்.பி உள்ளிட்ட சிலர் பாஜகவிற்கு செல்ல தயாராக இருப்பதாக சொல்கின்றனர். பாஜகவின் இந்த திட்டத்தால் அதிமுக தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.