Take a fresh look at your lifestyle.

உயர்தரம் சித்தியடையாதவர் ஜனாதிபதியாவது தவறாகும்: சரத் பொன்சேகா

உயர்தரம் சித்தியடையாத ஒருவரை நாடாளுமன்றத்துக்கு அனுப்புவதோ, ஜனாதிபதியாகத் தெரிவு செய்வதோ,மக்கள் செய்யும் பெரும் தவறாகும் என சிறலங்காவின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்rல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

“நாடாளுமன்றத்தில் 70 அல்லது 80 பேர் அளவில்தான், உயர்தரம் சித்தியடைந்துள்ளனர். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறக்கூடிய வேட்பாளர் ஒருவர் போட்டியிடத் தேவையில்லை. நாட்டை முன்னேற்றக்கூடிய ஒருவரே போட்டியிடவேண்டும். நாட்டை முன்னேற்றக்கூடிய தலைவர் ஒருவரை ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக முன்வைத்தால் எனது பூரண ஒத்துழைப்பை வழங்குவேன்” என்றார்.