அரசுக்கு எதிராகவே கூட்டமைப்பு வாக்களிக்க வேண்டும்.!

breaking
கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படாவிட்டால் அரசுக்கு எதிராக கூட்டமைப்பு வாக்களிக்க வேண்டும் என கல்முனையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட மதகுருமார்கள் கூட்டாக தெரிவித்துள்ளனர். உப பிரதேச செயலகத்தை  தரமுயர்த்த கோரி  உண்ணாவிரதத்தை மேற்கொண்டிருந்த கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரர், கிழக்கு மாகாண இந்து குருமார் அமைப்பின் தலைவர் க.கு.சச்சிதானந்தம் சிவம் குருக்கள், பாண்டிருப்பு அனைத்து ஆலயங்களின் ஒன்றியங்களின் தலைவர் கிருஸ்ணப்பிள்ளை லிங்கேஸ்வரன் ஆகியோர் நேற்று (புதன்கிழமை) கல்முனை சுபத்ராராமய விகாரையில் ஊடக சந்திப்பொன்றை நடத்தினர். இதன்போதே அவர்கள் இந்த கோரிக்கையினை கூட்டாக முன்வைத்தனர். மேலும் பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படவில்லை எனில் அம்பாறையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கான பிரதிநிதித்துவத்தை இழப்பதோடு தேசியப்பட்டியல் பிரதிநிதித்துவத்தையும் இழக்கவேண்டிவரும். எனவே அரசுக்கு ஆதரவாக வாக்களிப்பதா? – தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றுவதா என்பதை கூட்டமைப்பு தீர்மானிக்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.