பேஸ்புக்கில் இருந்து நிரந்தரமாக வெளியேறுங்கள் எச்சரித்த ஆப்பிள் நிறுவனர்.?

breaking
இன்றைய நவீன கால இளைஞர்களின் முதன்மை பொழுபோக்காக இருப்பது சமூகவலைத்தளங்கள் தான். அதிலும் குறிப்பாக ஃபேஸ்புக் தான் இளைஞர்கள் பாதிநேரம் தங்கள் நேரத்தை செலவிடும் முக்கிய தளமாக உள்ளது. இந்நிலையில் ஃபேஸ்புக்கில் பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளதால் அதனை விட்டு உடனே வெளியேறுங்கள் என ஆப்பிள் நிறுவன நிறுவனர்களில் ஒருவரான ஸ்டீவ் ஒஸ்னிக் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் இதுகுறித்து பேசிய அவர், "ஃபேஸ்புக்கில் நடந்த தகவல் திருட்டுக்கு பிறகு நான் அந்த செயலியில் இருந்து முழுவதுமாக வெளியேறிவிட்டேன். நீங்களும் ஃபேஸ்புக்கில் இருந்து வெளியேறுங்கள். சமூக வலைதளங்களால் நமக்கு நன்மைகள் இருந்தாலும், அதற்கு இணையாக நாம் நம்முடைய பிரைவசியை இழந்துகொண்டிருக்கிறோம். உங்கள் இதயத்தின் துடிப்பைக் கூட சென்சார் மூலம் அவர்களால் தெரிந்துகொள்ள முடியும். நீங்கள் தனிப்பட்ட முறையில் அடுத்தவருக்கு அனுப்பும் தகவல்களையும் அவர்களால் பார்க்க முடியும். இதையெல்லாம் தடுக்க ஒரே வழி என்னவென்றால், ஃபேஸ்புக்கில் இருந்து வெளியேறுங்கள்" என கூறியுள்ளார்.