இத்தாலி மேற்பிராந்திய தமிழீழ தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டு போட்டிகள்

breaking
  7/7/2019 ரெச்சியோ எமிலியா பிரதேசத்தில் இடம் பெற்ற இந்நிகழ்வில் ரெச்சியோ எமிலியா, பொலோனியா, மாந்தொவா, நாப்போலி ,யெனோவா பியல்லா ஆகிய இடங்களில் உள்ள திலீபன் தமிழ்சோலை மாணவர்கள் சிறுவர்கள் மற்றும் உதைபந்தாட்ட கரப்பந்தாட்ட கழகங்கள் பங்கு பற்றினர். காலை 10.00 மணிக்கு பொதுச்சுடர் ஏற்றிவைக்கப்பட்டதை தொடர்ந்து தமிழீழ இத்தாலிய தேசியக்கொடிகள் ஏற்றி ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டது. பின் விளையாட்டு கழகங்களின் கொடிகள் ஏற்றப்பட்டு ஒலிம்பிக் தீபம் ஏற்றி வைக்கப்பட்டது தொடர்ந்து விளையாட்டு போட்டிகளின் ஆரம்ப நிகழ்வாக திலீபன் தமிழ்ச்சோலை மாணவர்களின் அணிநடை இடம்பெற்றது தொடர்ந்து சிறுவர்களுக்கான மெய்வல்லுனர் போட்டிகள் ஆண் பெண்களுக்கான கரப்பந்தாட்ட ம் ஆண்களுக்கான உதைபந்தாட்ட ம் மற்றும் பொதுமக்களுக்காகவும் சிறப்பு விளையாட்டுகளும் நடாத்தப்பட்டது. மாலைவரை தொடர்ந்த இந்நிகழ்ச்சியில் 200க்கு மேற்ப்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கு பற்றினர் இறுதி போட்டிகளில் கலந்து கொண்ட யெனோவா நியூஸ்ரார் போய்ஸ் கழகம் கால்பந்தாட்ட கிண்ணத்தையும் மாந்தொவா ஈழநிலா கழகம் கரப்பந்தாட்ட கிண்ணத்தையும் தமதாக்கிக் கொண்டனர். சிறுவர்கள் போட்டிகள் பெற்றோர் மற்றும் பொதுமக்களின் ஆர்வத்தை தூண்டியது. இறுதியில் சான்றிதழ்கள் வெற்றிக்கிண்ணங்கள் வழங்கப்பட்டதை தொடர்ந்து தேசியக்கொடி இறக்கப்பட நம்புங்கள் தமிழிழம் நாளை பிறக்கும் பாடலுடன் இந்நிகழ்வு நிறைவுபெற்றது.