வெள்ளத்தில் சிக்கிய குரங்குகள் மீட்ட காவல்துறையினர் வைரல் ஆகும் வீடியோ.!

breaking
இந்தியாவில் அசாம், குஜராத், மத்திய பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதில் அசாம் மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வட மாநிலங்களில் முக்கிய ஆறுகளில் ஒன்றான அசாம் மாநிலம் பிரம்மபுத்ரா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, அந்த மாநிலத்தில் பல மாவட்டங்கள் பிற பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளது. சுமார் 9 லட்சம் மக்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ளதாக அசாம் மாநில அரசு தெரிவித்துள்ளது. மீட்பு பணியில் ஈடுபட தேசிய பேரிடர் மீட்பு படையினர் கொண்ட குழு அதிக அளவில் அசாம் மாநிலத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.   இந்நிலையில் குஜராத்தை மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, அம்மாநிலத்தில் முக்கிய மாவட்டங்களில் ஒன்றான வதோதராவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அந்த பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் இரு குரங்குகள் சிக்கியது. வெள்ளத்தில் சிக்கிய குரங்குகளை மீட்க போலீசார் கயிறு கட்டி கட்டினார். அந்த கயிற்றில் ஏறி வந்த குரங்குகள், பத்திரமாக மீட்கப்பட்டது. கயிற்றில் ஏறி வரும் குரங்குகள் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.