திருகோணமலையில் சம்மந்தனின் ஆசிர்வாதத்துடன் ரணிலின் பூசை!

breaking
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடனேயே தமது அரசாங்கத்திற்கு எதிரான  இரண்டாவது நம்பிக்கையில்லா பிரேரணையை வெற்றிகொள்ள முடிந்தது. இன்று இவ்விடத்துக்கு நான் வருகை தந்து இருக்கிறேன் என்றால் அதற்கு அவர்களின் ஆதரவே காரணம். தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இங்கு வராவில்லாவிட்டாலும் அவரின் ஆசிர்வாதத்துடனேயே இந்த நிகழ்வு இங்கு நடைபெறுகிறது என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். பத்து இலட்சம் காணி உறுதி வழங்கும் தேசிய விழா திருகோணமலை மாவட்டத்தில் நேற்று நடைபெற்றது. மக்கெய்சர் விளையாட்டு அரங்கு முன்பாக அமைக்கப்பட்ட விசேட அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றிய போதே ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவித்தார். ரணில் தெரிவித்த கருத்துக்களில் எமது திட்டங்களை யாராலும் தடுக்க முடியாது. நாம் செய்வதை போன்று முன்னைய அரசாங்கத்தால் எதையுமே செய்ய முடியவில்லை. இன்று எதிர்க்கட்சியினர் பாநாடாளுமன்றத்திற்கு வருவதில்லை. அவர்களுக்குள் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து ஏற்பட்டு வரும் தோல்வி காரணமாகவும், வெட்கம் காரணமாகவும் அவர்கள் வருவதில்லை. கூட்டமைப்பின் ஆதரவுடன் எமது அரசாங்கம் நாட்டை கட்டி எழுப்புவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம் என்றார்.