நாவற்குழியில் விகாரை அமைக்கும் வரை பார்த்திருந்துவிட்டு எச்சரிக்கை!

breaking
வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தின் நுளைவு பகுதியான நாவற்குழிப்பகுதியில் விகாரை அமைக்கும் வரைபார்த்திருந்துவிட்டு தற்போது தங்கள் சுயநலத்திற்காக அறிக்கைகளை விடுகின்றார்கள் கன்னியா வெந்நீரூற்று பகுதியிலுள்ள பிள்ளையார் ஆலயத்தை உடைத்து அந்த இடத்தில் விகாரை கட்டுவதற்கு எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கை வடக்கு கிழக்கில் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் கட்டமைப்பு மற்றும் கலாசார ரீதியான இனப்படுகொலையின் ஒரு அப்பட்டமான வெளிப்பாடாகும் என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் முன்னாள் முதலமைச்சருமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். சகல தமிழ் கட்சிகளும் எமது இனத்தின் எதிர்கால இருப்பு பெரும் ஆபத்தில் இருக்கின்றது என்பதை உணர்ந்து தமக்கு இடையிலான காழ்ப்புணர்வுகள் அரசியல் போட்டிகளை மறந்து ஒன்றுபட்டு முழுமையான அரச எதிர்ப்பு அரசியலை மேற்கொள்ள ஆயத்தமாக வேண்டும். என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று (திங்கட்கிழமை) மாலை ஊடகங்களுக்கு அனுப்பிவைத்த அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.   வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தின் நுளைவு பகுதியான நாவற்குழிப்பகுதியில் விகாரை அமைக்கும் வரைபார்த்திருந்துவிட்டு தற்போது தங்கள் சுயநலத்திற்காக அறிக்கைகளை விடுகின்றார்கள் வடமாகாணசபையின் ஆட்சிக்காலத்திலேயே வடக்கு கிழக்கு பகுதிகயில் பல விகாரைகள் அமைப்பதற்கான அடித்தளம் இடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது இருந்தும் கூட்டமைப்பின் ஆதரவுடன் இந்தவிகாரைகள் அமைக்கும் பணி தற்போது தீவிரம் பெற்றுள்ளன இன்னிலையில் அரசியல் சுயலாபம் தேடுவதற்காகவே பலர் அறிக்கைவிடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள். இனிவரும் தேர்தலினை இலக்காக கொண்டு தமிழர் போராட்டங்களை முன்னெடுக்காத அமைப்புக்களாக தமிழர்களின் அமைப்புக்கள் காணப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது. முழையிலேயே கிள்ளி எறியவேண்டிய விடையங்களை வளரவிட்டுவிட்டு தங்கள் அரசியல் நலனில் அக்கறை கொண்டவர்களாக செயற்பட முற்படும் அரசியல்வாதிகள் முன்னிலையில் தமிழர்களின் உரிமை என்றும் கிடைக்கப்போவதில்லை என்பதுதான் உண்மை