மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

breaking
முல்லைத்தீவு கடலில் அதிகரித்து செல்லும் சட்டவிரோ கடற்தொழில் நடவடிக்கையால் முல்லைத்தீவு கரையோ மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளார்கள்.
முல்லைத்தீவு கடலில் இரவு நேரங்களில் வெளி மாவட்ட மீனவர்கள் சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றார்கள் சுருக்குவலை,மற்றும் ஒளிபாச்சி மீன்பிடிப்பது போன்ற நடவடிக்கையில் கரையோர கடலினை நம்பி தொழில் செய்யும் மீனவர்களின் வலைகளில் மீன்கள் சிக்குவதில்லை என கவலை தெரிவித்துள்ளார்கள்.
கொக்குளாள்,சாலை,புல்மோட்டைப்பகுதிகளை சேர்ந்த வெளிமாவட்ட கடற்தொழிலாளர்கள் இரவு நேரங்களில் இவ்வாறான சட்டவிரோ கடற்தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள் இவர்கள் கடலில் சட்டவிரோ தொழில் செய்வதால் நாங்கள் தொழில் செய்யும் கடற்பகுதிக்கு மீன்கள் வருவதில்லை என்றும்  இதனால் கரைவலையினை நம்பி தொழில் செய்யும் மீனவர்களின் கரைவலை மடியில் மீன்கள் படுவதில்லை பத்திற்கு மேற்பட்ட தொழிலாளர்களை வைத்து கரைவலையினை இழுத்து கறிக்குகூட மீன் சிக்குவதில்லை என கவலை தெரிவித்துள்ளார்கள்.
இவ்வாறான வெளிமாவட்ட மீனவர்களின் சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கை தொடர்பில் பல தடவைகள் கடற்தொழில் நீரியல்வளத்திணைக்களத்திடம் சொல்லியும் எந்த பலனும் கிடைக்கவில்லை என்றும் கரையோர மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளார்கள்.