வடக்கில் நிறுவப்படும் அனைத்து விகாரைகளுக்கும் கூட்டமைப்பு ஆசி வழங்கியுள்ளது!

breaking
வடக்கில் நிறுவப்படும் அனைத்து விகாரைகளுக்கும் கூட்டமைப்பு ஆசி வழங்கியுள்ளது! யாழ்ப்பாணம் வரவேற்க்கிறது நகர நுழைவாயிலில் நாவற்குழியில் முன்னெடுக்கப்பட்டுவரும் பௌத்த விகாரை நிர்மாண வேலைகளிற்கு கூட்டமைப்பினர் அனுமதி வழங்கியமை அம்பலமாகியுள்ளது. இது மாத்திரமல்ல தற்போது உள்ள ரணில் தலைமையிலான அரசிற்கு ஆதரவுகொடுத்து பல்கோடிக்கணக்கான பணங்களை தங்கள் பைகளில் நிரப்பி வருகின்றார்கள் வெறும் அபிவிருத்தி என்ற பெயரில் வீதிகளை செப்பினிட செய்துவிட்டு வடக்கு கிழக்கில் ஆயிரம் விகாரைகளை அமைப்பதற்கும் சிங்கள குடியேற்றங்களை நிறுவதற்கும் அரசிற்கு ஆதரவாக கூட்டமைப்பின் 14 உறுப்பினர்களுகம் காணப்படுகின்றார்கள் என்பது வெளிப்படையாகியுள்ள விடையமாக தமிழ்மக்கள் புரிந்து கொள்ளவேண்டும். இதனை விட புலம் பெயர்வாழ் தமிழ் மக்கள் நன்கு புரிந்து கொள்ளுங்கள் தமிழ்மக்களுக்கு ஒன்றையும் அரசிற்கு இன்னொன்றையும் கூறி தற்போதுள்ள சிங்கள அரசின் ஆட்சியினை தக்கவைத்துக்கொள்வதில்தால் இப்போதுள்ள கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஈடுபட்டு வருகின்றார்கள். இவற்றை மாற்றி அமைக்கவேண்டும் புலம்பெயர் தமிழ் சமூகம் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கும் பாரியளவிலான நிதிகள் கூட தமிழ்மக்கள் மீதான பௌத்த ஆக்கிரமிப்பிற்குதான் வழிசமைக்கும் என்பதை புரிந்துகொள்ளுங்கள் சத்தமின்றி விகாரையின் நிர்மாணவேலைகள் தொடர்கின்ற நிலையிலேயே கூட்டமைப்பின் சாவகச்சேரி பிரதேச சபை கட்டுமானப்பணிகளிற்கு எதிராக நீதிமன்றில் தொடுத்திருந்த வழக்கினை விலக்கிக்கொண்டுள்ளமை அம்பலமாகியுள்ளது. குறித்த பௌத்த விகாரை நிர்மாண வேலைகளிற்கு எதிராக சாவகச்சேரி பிரதேசசபை முன்னதாக வடமாகாண முதலமைச்சரின் அறிவுறுத்தலுக்கமைய சாவகச்சேரி நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்து தடை உத்தரவை பெற்றிருந்தது. எனினும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சாவகச்சேரி நகரசபையின் ஆட்சியை கைப்பற்றியதும் இந்த விவகாரத்தைத் திரும்பப் பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ள அரசாங்க ஊழியரான பிரதேசசபை செயலாளர்; தள்ளப்பட்டிருந்தார். இதனிடையே விகாரையின் அபிவிருத்தியை விரைவுபடுத்துவதற்காக 22 பிப்ரவரி அன்று அமைச்சரான சம்பிக ரணவக்கஇ நேரில் நாவற்குழிக்கு வருகை தந்திருந்தார். இதனிடையே நாவற்குழி சிங்கள குடியேற்ற திட்டம் ராஜபக்ஷ நிர்வாகத்தின் காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட குடியேற்றத் திட்டம் மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் கீழ் சிங்கள குடியேற்றவாசிகளுக்கு அரசு நிதியுதவி வீட்டுவசதி திட்டங்களுடன் மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளமை யாவரும் அறிந்ததே. அபிவிருத்தி என்ற பெயரில் நிதியினை பெற்று அரசிற்கு ஆதரவு கொடுக்கும் கூட்டமைப்பின் உறுப்பினர்களால் தமிழர்களுக்கு எந்த விடிவும் கிடைக்கப்போவதில்லை தமிழர்வாழ் இடங்களில் பௌத்த விகாரைகளும் சிங்கள குடியேற்றங்களுமே முளைக்கின்றன என்பது கடந்தகால உண்மை சம்பவங்கள் புலம்பெயர் தமிழர்களின் நிதிப்பங்களிப்பு கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இருக்கின்றன இவையும் இவ்வாறான செயற்பாட்டிற்கு துணைபோகும் எந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கம் வழங்குவதை தவிர்த்து விடுங்கள் மாறாக பாதிக்கப்பட்ட மக்களிடம் நேரடியாக செல்ல வழிசமையுங்கள்