விண்கல்லில் விண்கலத்தை தரையிறக்கிய ஜப்பான் ஆச்சரியப்புகைப்படங்கள்..!

breaking
ஒரு விண்கல்லின் வாழ்க்கை எப்போதும் தனிமையானது. இந்த பாறைகள் விண்வெளியின் குளிர் வெற்றிடத்தில் தொடர்ந்து பல ஆண்டுகளாக மிதந்தகொண்டிருக்கும். ஆனால் கடந்த புதனன்று ரயூகு விண்கல்லானது சிறப்பு விருந்தினர் ஒருவரை வரவேற்றுள்ளது. ஜப்பானின் ஹயாபுசா-2 ஆய்வு விண்கலமானது அந்த விண்கல்லின் பரப்பின் மீது 21:06ET (வியாழக்கிழமை 01:06 UTC) மணிக்கு வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளது. ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம் (ஜாக்ஸா) 2014 டிசம்பரில் ஹயாபுசா -2 ஐ விண்வெளியில் செலுத்தியது.இதன் நோக்கமானது, சூரியனில் இருந்து 131மில்லியன் மைல்கள் (211 மில்லியன் கிலோமீட்டர்) தொலைவில் சுற்றிவரும் அரை மைல் சுற்றளவு கொண்ட பழமையான விண்கல்லான ரயுகு-வை ஆராய்ந்து மாதிரிகளை சேகரிப்பதாகும். ஜூன் மாதம் 2018 ல் அதன் இலக்கை அடைந்த விண்கலம், பின்னர் ஆய்வுகளை மேற்கொள்வது, விண்கல்லின் ஈர்ப்புவிசையை அளவிடுவது மற்றும் தொடுவதற்கு ஒத்திகை பார்ப்பது போன்ற பணிகளை ஆரம்பித்தது. கடந்த ஏப்ரல் மாதம் ஒரு செப்பு தகடு மற்றும் வெடிமருந்து பெட்டியை விண்கல்லில் வெடிக்க வைத்து, பாறையை இளக வைத்ததுடன் மேற்பரப்பின் கீழ் உள்ள பொருளை வெளிப்படுத்தியதுடன், நேற்று இரவு ரயுகு விண்கல்லில் பாறை மற்றும் மண் மாதிரிகளை சேகரிக்க வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளது. விண்கலம் விண்கல்லின் மேற்பரப்பை விட்டு வெளியேறும் போது அதன் புகைப்படங்களை எடுத்தது.முதல் புகைப்படம் 10:06:32 JST (புறப்பட்ட நேரம்) மணிக்கு எடுக்கப்பட்டது மற்றும் அதில் நீங்கள் தூசிகள் பறப்பதை பார்க்க முடியும். தரையிறங்கியதால் ஏற்பட்ட மையப்புள்ளி இருண்ட பகுதிக்கு அருகில் இரண்டாவது படம் 10:08:53 மணிக்கு எடுக்கப்பட்டது "என்று ஜாக்ஸா ட்வீட் செய்துள்ளது. பாறைகள் மற்றும் உலோகங்களால் உருவான விண்கற்கள் அனைத்து வகையான நகைச்சுவையான வடிவங்களிலும், கூழாங்கல் அளவிலிருந்து 600 மைல் அளவு வரை உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை செவ்வாய் மற்றும் வியாழனுக்கு இடையேயான விண்கல் பகுதியில் இருந்தாலும், ரயுகு-வின் சுற்றுவட்டப்பாதை சிலநேரங்களில் பூமிக்கும் செவ்வாய்க்கும் இடையில் இருக்கிறது. சில விண்கற்கள் 4.5பில்லியன் ஆண்டுகளுக்கு பின்பு சூரிய குடும்பம் உருவான போதே, கோள்கள் உருவாகி மிஞ்சியிருந்த பொருட்கள் எல்லாம் சேர்ந்து உருவானவை. அப்படி பார்த்தால், விண்கற்கள் கால கண்ணாடியாக செயல்படக்கூடியவை. இந்த பழங்கால பாறைகளில் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பவை மூலம், சூரியகுடும்பத்தின் வரலாற்றை கூறமுடியும். சி-டைப் விண்கல் என கூறப்படும் ரயுகு-வில், அதிகளவு இயற்கையான கார்பன் மூலக்கூறுகள், தண்ணீர் மற்றும்அமினோ அமிலங்கள் கூட இருக்க வாய்ப்புள்ளது. பூமியில் உயிரிகளின் பரிணாமத்திற்கு அவசியமான புரதத்தின் கட்டுமானங்களை அமினோ அமிலங்கள் உருவாக்குகின்றன. சில கோட்பாடுகள் முதலில் அமினோ அமிலங்களை பூமிக்கு விண்கற்களே கொண்டு வந்தன என்றும், அதுவே நம்முடைய கிரகத்தில் உயிரிகளுக்கான விதைகளை ஊன்றியது என்று கூறப்பட்டாலும், இன்னும் அது விவாதப்பொருளாகவே உள்ளது. நமது சூரிய மண்டலத்தின் நான்கில் மூன்று பங்கு விண்கற்கள் சி-டைப் ஆகும். ஹயாபுசா-2ன் முதன்மை நோக்கமே அந்த விண்கற்களில் இருந்து பூமிக்கு மாதிரிகள் கொண்டு வருவது தான். கடந்த பிப்ரவரி மாதம் முதன்முதலாக இந்த விண்கலம் ரயுகு-வில் தரையிறங்கிய போது, அதன் பரப்பிற்கு அடியில் உள்ள மேலோட்டமான மாதிரிகளை மட்டுமே சேகரித்தது. ஆனால் திட்ட மேலாளர்கள்சில ஆழமான பாறை மாதிரிகளையும் சேகரிக்க விரும்பியது. ஏனெனில் இந்த மாதிரிகள் விண்வெளியின் கடுமையான வானிலையால் பாதிக்கப்பட்டிருக்காது. இதனை முடிப்பதற்காக, விண்கல்லில் இருந்து மேலெழும்பிய விண்கலம், மேற்பரப்பில் 10மீட்டர் பள்ளத்தை வெடிப்பு மூலம் உருவாக்கி அடிப்பகுதியின் மாதிரிகளை சேகரித்தது குறிப்பிடத்தக்கது.