தமிழரசுக்கட்சி இளைஞர் அணிக்கு புலம்பெயர் இளைஞர்கள் பகிரங்க மடல்.!

breaking
அண்மையில் ஊடகங்களுக்கு கருத்துதெரிவித்த தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணி செயலாளரும் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளருமான சுப்பரமணியம் சுரேன் அவர்கள் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து புலம் பெயர் தேசத்து இளைஞர்கள் செயற்படவேண்டும் என அறைகூவல் விடுத்திருந்தார் இதற்கு பதிலளிக்கும் முகமாக புலம்பெயர் வாழ் இளைஞர்கள் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்னர் அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணி செயலாளர் அண்மையில் புலம் பெயர் இளைஞர்களிடம் ஓர் அறைகூவலை விடுத்திருந்தார்  அதாவது   தமிழீழத்  தேசியத் தலைவரது தீர்க்க தரிசனமான ஒரு முடிவின் அடிப்படையிலும் தேசிய தலைவரின் வழிப்படுத்தலில் உருவாக்கப்பட்டதே இவ் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எனும் மாபெரும் மக்கள் இயக்கமாகும் எனவே புலம்பெயர் உறவுகளும் இளைஞர்களும் இலங்கை தமிழரசுக் கட்சியுடன் இணைந்து செயற்பட முன்வரவேண்டும் என தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக புலம் பெயர் இளைஞர்கள் என்ற அடிப்படையில் தமிழரசுக் கட்சி இளைஞர் அணிக்கு சில தெளிவுபடுத்தல்களை கூற விரும்புகின்றோம். எந்தவிதமான நிபந்தனையுமின்றி இன்றைய அரசை பாதுகாத்து வைத்திருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழர்களுக்கு இருக்கும் முக்கிய பிரச்சினைகளான காணாமல் போனோர் விவகாரம் அரசியல் கைதிகள் விடுதலை மற்றும் காணி விடுவிப்பு போன்ற விடயங்களில் இதுவரைகாலமும் ஏதாவது ஆக்கபூர்வமான நடவடிக்கை எதுவும் மேற் கொண்டுள்ளதா?; உங்களின் ஆதவருடன் இருக்கும் அரசாங்கத்திடம் இவ்விடயம் தொடர்பாக ஏன் உங்களால் பேரம்பேச முடியாமல் போனது. வார்த்தைக்கு வார்த்தை தேசிய தலைவரால் உருவாக்கப்ட்ட கூட்டமைப்பு என்று கூறுகின்றீர்கள் ஆனால் உங்களின் தலைவர் சம்பந்தன் அவர்கள் புலிகள் இவ் கூட்டமைப்பை உருவாக்கவில்லை என்றும் நாங்களாகத்தான் ஒரு கூட்டமைப்பை உருவாக்கினோம் என்று இலங்கை அரச ஊடகம் ஒன்றில் பகிரங்கமாக கூறியுள்ளார் (வசந்தம் தொலைக்காட்சியில்) மேலும் புலிகள் அழிக்கப்பட்டதால்தான் நான் நிம்மதியாக திருகோணமலைக்கு சென்று வருகின்றேன் என்றும் புலிகளை அழித்த மகிந்தராஜபக்ச  தான் எங்கள் தேசிய தலைவர் என்று ஊடகங்களில் கருத்து தெரிவித்திருந்தார். அத்துடன் விடுதலைப் புலிகள் சிறுவர்களை பலாத்காரமாக படைக்கு சேர்த்து கொண்டார்கள் எனவும் தனது நெருங்கிய நன்பனான லக்ஸ்மன் கதிர்காமரை புலிப் பயங்கரவாதிகள் தான் சுட்டார்கள் என பகிரங்கமாக  சம்பந்தன் அவர்கள் பாராளுமன்றத்தில் கூறியிருந்தார். இவ்வாறக உங்களின் உத்தம தலைவர்கள் புலி எதிர்ப்பு கொள்கையில் இருக்க நீங்கள் தேசிய தலைவரின் நெறிப்படுத்தலில் உருவாக்கிய கூட்டமைப்பு இதில் புலம்பெயர் தேசத்தினராகிய எம்மை இணைந்து செயற்படுவோம் என அழைப்பு விடுக்கின்றீர்கள். கூட்டைப்பினர் தாங்கள் அரசாங்கத்திடம் மண்டியிட்டது மாத்திரமின்றி ஒட்டு மொத்த இலங்கை வாழ் தமிழ் மக்களை சிங்கள ஆட்சியாளர்களிடம் அடகுவைத்துவிட்டு. இப்பொழுது எம்மையும் அழைக்கின்றீர்கள் தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணியினராகிய நீங்கள் எமது தேசிய தலைவரின் கொள்கையை தாங்கி செல்பவர்கள் என்றால் முதலில் உங்களின் கட்சி தவைர்கள் இவ்வாறு புலி எதிர்ப்பு வாதத்தை முன்வைத்ததற்கு உரிய பதிலை அவர்களிடம் கேளுங்கள் உங்கள் தலைவர்கள் ஒரு கருத்தையும் நீங்கள் ஒரு கருத்தையும் கூறி மீண்டும் எம் சமூகம் அழிவை நோக்கி செல்வதற்கு வழிசமைக்காதீர்கள். முதலில் கூட்மைப்பு யாரால் உருவாக்கப்பட்டது எதற்காக உருவாக்கபட்டது என உங்களின் தலைவர்களுக்கு புரியவைத்து விட்டு பின்னர் எமக்கு அழைப்பு விடுங்கள்