குண்டுச்சட்டியுக்குள் குதிரை ஓட்டும் தனிக்காட்டு ராசாக்கள்!

breaking

வெளிநாட்டிலில் இருந்து கொண்டு தனிக்காட்டு ராசா அரசியல் செய்பவர்கள் திருமிகு கயேந்திரகுமார் அவர்கள் இருந்தாலும் குற்றம், நின்றாலும் குற்றம், படுத்தாலும் குற்றம் என குற்றி முறிகின்ற கருத்துக்களை தொடர்ச்சியாக செய்துவருகின்றார்கள் முதலில் வெளிநாடுகளில் இவர்களின் பின்னணி எப்படி இயங்குகின்றது என்பதனை ஒரு முறை புரட்டி படித்து விட்டு தொடர்வோம்.

 

இந்த நபர்கள் 2009 இற்கு முதல் தமிழீழத்தேசியத்தலைவரின் கட்டமைப்புக்குள் இருந்து பணிசெய்துவிட்டு 2009 இற்கு பின் அதே கட்டமைப்புகளுக்கு சேறு அள்ளி வீசிவிட்டு தனிக்காட்டு ராசா அரசியலை அங்கொன்றுமாய் இங்கொன்றுமாய் செய்து வருகின்றார்கள் குறிப்பாக இவர்களது அரசியல் சமூக ஊடகங்களை கடந்து போகமுடியாத முட அரசியலாக முடங்கிக்கிடக்கின்றதே தவிர வினைத்திறனாக எதுவுமே இல்லை

 

இந்த நிலையில் தமிழீழவிடுதலைக்கான ஆயுதப்போராட்டம் 2009 இல் முள்ளிவாய்காலில் நடைபெற்ற தமிழின அழிப்போடு அமைதியாகியதற்கு பிற்பாடு, கடந்த 16 ஆண்டுகளாக தமிழினத்திற்காக விட்டுக்கொடுக்காத அரசியலையும் களச்செயற்பாடுகளையும் செய்து வருகின்ற திருமிகு கயேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியை, நலிவடையச்செய்வதற்கான செயற்பாடுகளை எதிரிகளும் அதன் உதிரிகளும் ஒவ்வொரு காலகட்டத்திலும் செய்துவருகின்றர்கள்,  அதற்கு பிரதான காரணம் அவர்கள் தமிழ் மக்களின் சுயாட்சிக்கான அரசியலை வென்றாகவேண்டும் என்ற உறுதியோடு பயணித்து வருகின்றமை.

 


தாயகத்தில் 6ஆம் திருத்த சட்டத்துக்குள் இருந்து தமிழ்மக்களின் அரசியலை துணிகரமாக முன்னெடுக்கும் சக்தியாக இயங்கிக்கொண்டிருப்பவர்களை, தமிழீழத்தை 6ஆம் திருத்த சட்டத்துக்கு பயந்து கேட்காமல் கூட்டாட்சி அரசியலை கேட்கின்றார்கள் என தனிக்காட்டு ராசாக்கள் புலத்திலிருந்து புலம்பிக்கொண்டிருப்பதை பார்ககமுடிகின்றது.

சரி இந்த தனிக்காட்டு ராசாக்கள் இங்குள்ள ஊடகங்களில் ஒப்பாரி வைக்காமல் தங்களின் வெளிநாட்டு பிரயா உரிமையை கிழித்தெறிந்துவிட்டு தாயகத்துக்கு சென்று தமிழீழக்கோரிக்கையை முன்வைத்து போராடவேண்டியதுதானே அதைவிடுத்து அடுத்தவனை பந்தையம் கட்டி தொடர்ந்தும் விளையாடுவதுதான் உங்களின் போராட்டமா?

 



வெளிநாட்டில் இருந்து கொண்டு ஊடகங்களில் ஒப்பாரி வைத்துவிட்டு ஆண்டுக்கொருமுறை பண்பாட்டு நிகழ்வு செய்துவிட்டு  தமிழீழத்தை அடையமுடியுமா?

தேசியத்தலைவர் முப்படை கட்டி பெரும் பலத்தோடு போராடினார் அந்த பலத்தில் நின்று தமிழ் மக்களின் நிரந்தரத்தீர்வு தமிழீழம் என்று உறுதியோடு போராடினார்.

இன்று எங்களிடம் என்ன பலம் இருக்கின்றது ஆயுதபலம் உண்டா? இல்லை, அரசியல் பலம் உண்டா? இல்லை, இருகின்ற அரசியல் பலத்தினையும் எதிரியானவன் சிதைத்து சின்னாபின்னமாக்கி தனது பின்னங்காலைத் தடவித்திரியும் அரசியல் வியாதிகளாக உருவாக்கிவிட்டிருக்கின்றான்.

இப்படிப்பட்ட அவலச்சூழலில் தமிழினத்தின் அரசியலை 6ஆம் திருத்தச்சட்டத்துக்குள் இருந்துகொண்டு சாதுரியமாக நகர்த்தி வருகின்ற ஒரே தரப்பாக எஞ்சி இருப்பது கயேந்திரகுமார் அணி மட்டும்தான்.

 





இந்த நிலையில்தான் ஒற்றையாட்சிக்குள் தமிழ்மக்களை நிரந்தர அடிமைகளாக்கும் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போடும் விதமாக தாயகத்தில் தமிழ் அரசியல் கட்சிகளை ஒன்றிணைக்கும்  முயற்சியை முன்னெடுத்தார் திருமிகு கயேந்திரகுமார் அவர்கள், ஆனால் அடிவருடி அரசியலில் பழக்கப்பட்டவர்கள் மீண்டும் முருங்கை மரத்தில் ஏற, தமிழக தொப்புள்கொடி உறவுகளின் அரசியல் கட்சிகளோடு பேச்சுக்களை முன்னெடுத்து தமிழ் மக்கள் அரசியல் ரீதியா எதிர்கொள்ளப்போகும்  ஆபத்திற்கு அணைகட்ட முயற்சிக்கின்றார்.

 

ஆனால் தனிக்காட்டு ராசாக்கள் இதற்கும் தடைகற்களாய் இருப்பதை பார்க்கமுடிகின்றது, கடந்த கால கசப்பபுணர்வை மறந்து கைகுலுக்குகின்றார்கள் என சங்கு ஊதுகின்ற இவர்கள் ஒன்றைக்கவனிக்கவேண்டும், அதிகாரத்தில் இருப்பவர்களோடு பேசினால் மட்டுமே அரசியல் தேர் நகரும், அதை விடுத்து குண்டு சட்டிக்குள் குதிரை ஒடிக்கொண்டிருந்தால்

எமை அழித்தவன் தாயகத்தில் அரசியலை வென்று தமிழ் மக்களை நிரந்தர அரசியல் அடிமைகளாக்கிவிடுவான் அப்போதும் உங்களால் குண்டு சட்டியுக்குள் குதிரைதான் ஒட்டமுடியும்.

தமிழீழம் என்பது இறுதி இலக்கு அதற்கு ஏதுவான சூழல் உருவாக்குவதற்கான  அரசியல் நகர்வுகள் உருவாக்கப்படாமல் எப்படி அந்த இலக்கை வெல்ல முடியும.

-தமிழன்-