கட்டுநாயக்கவில் கொட்டப்பட்டும் வெளிநாட்டு கழிவுகள் .!

breaking
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்திலுள்ள தனியார் நிறுவனமொன்றின் காணியில் காணப்படும் கழிவுகளை, மத்திய சுற்றாடல் அதிகார சபையின் அதிகாரிகள் இன்று சோதனையிட்டனர். 2013ஆம் ஆண்டில் வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை பயன்படுத்தி, குறித்த நிறுவனம் ஒன்று 2017ஆம் ஆண்டிலிருந்து 130 கொள்கலன்களை இறக்குமதி செய்துள்ளமை மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணையூடாக தெரியவந்துள்ளது. அவற்றுள் 57 கொள்கலன்கள் மீண்டும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதுடன், கழிவுகள் அடங்கிய 72 கொள்கலன்கள் தொடர்ந்தும் கட்டுநாயக்கவில் காணப்படுகின்றன. நாட்டில் நடைமுறையிலுள்ள சுற்றாடல் சட்டத்திற்கமைய கழிவுகளைக் கொண்டு வருவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்திலுள்ள தனியார் நிறுவனமொன்றில் குப்பைக் இறக்குமதி செய்யப்பட்டுள்ள விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.