பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் கொந்தளித்த ராஜேஸ்வரி பிரியா.!

breaking
கலை என்பது மக்களை நேரடியாக சென்றடையும் ஒரு ஊடகப்பரப்பு, அதிலும் சினிமா மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என்பவை குறுகிய காலத்தில் பெரும்பாலான மக்களை வீடுகளுக்குள்ளேயே செல்கின்றது. இப்படிப்பட்ட தமிழ் சினிமா மற்றும் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மக்களுக்கு பயனுள்ள விடயங்களை கொண்டு செல்கின்றது என்றால் 0.01 வீதம் கூட இல்லை, மாறாக பணம் சம்பாதிப்பதை மட்டும் குறிக்கோளாக கொண்டு ஆபாச நிகழ்ச்சிகளையும், ஆபாச திரைப்படங்களையுமே கொடுக்கின்றது இந்த துறைகள். இந்நிலையில் தற்போது பெரும் சர்ச்சைக்குரிய விடயங்களாக இருப்பவை ஆடை என்கின்ற திரைப்படம், மற்றும் பிக்பாஸ் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி, இந்த நிகழ்ச்சியும் திரைப்படமும் தற்போது பல சமூக ஆர்வலர்காளால் கடுமையான விமர்சனத்திற்குள்ளாகிவருகின்றது. இந்நிலையில் கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்து பிரிந்து சென்று புதிய கட்சியை தொடங்கியுள்ள ராஜேஸ்வரி பிரியா கடுமையாக விமர்ச்சித்துள்ளார். அவர் மேலும்   கூறுகையில் அமலாபால் நடித்த ‘ஆடை’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள நிர்வாண காட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து போலீஸ் புகார் கொடுத்துள்ளேன். போலீசார் இதுகுறித்து கடுமையான நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர். இந்த திரைப்படத்தில் உள்ள நிர்வாணக் காட்சிகளை நீக்கும்படி நாங்கள் புகார் கொடுக்க வில்லை. ஏனெனில் இந்த படம் சென்சாரில் ‘ஏ’ சர்டிபிகேட் பெற்றுள்ளதால் ஒரு காட்சியை நீக்கும்படி சொல்வது சொல்ல முடியாது. ஆனால் அதே நேரத்தில் அந்த நிர்வாண காட்சியை விளம்பரப்படுத்தப் கூடாது என்பது குறித்து புகார் மனு அளித்துள்ளோம் போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த படத்தின் விநியோகிஸ்தர்ளிடம் நிர்வாண காட்சியை விளம்பரப்படுத்த கூடாது என்று தெரிவித்துள்ளனர். விநியோகிஸ்தர்களும் அதனை ஒப்புக் கொண்டதால் இந்த படத்தின் விளம்பரங்களில் இனிமேல் நிர்வாண காட்சிகள் வராது என்று நம்புகிறோம் . மேலும் நடிகை அமலா பால் வேறு மாநிலத்தில் இருந்து வந்தவர் என்பதால் அவருக்கு தமிழ் கலாச்சாரம் குறித்து தெரியாது. அவருக்கு தேவை ஒரே நாளில் உலகம் முழுவதும் பிரபலமாக வேண்டும், இரண்டாவது பணம். இந்த இரண்டுக்காகத்தான் அவர் இம்மாதிரியான காட்சிகளில் நடித்துள்ளார். இந்த காட்சிகள் இளம் வயதினரை தவறான வழியில் கொண்டு வாய்ப்பாக அமையும். தற்போது தமிழகத்தில் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் இதுபோன்ற காட்சிகளை விளம்பரப்படுத்தினால் சிறுவர்களின் மனம் கூட மாறுவதற்கும் வாய்ப்பு உண்டு. எனவே இந்த காட்சியை விளம்பரப்படுத்த கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். தமிழக மக்கள் நினைத்தால் இந்த படத்தை தோல்வி அடையச் செய்யலாம். அதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். மக்கள் தயாராக இருக்கிறார்களா? ன்பதுதான் இப்போதைய கேள்வி என்று பிரியா ராஜேஸ்வரி தெரிவித்துள்ளார்.