ஸ்டாலின் முதல்வராய்டுவார்ல.? ஜோசியரை வரவழைத்து ஜோசியம் பார்த்த துர்கா.!

breaking
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் டிரெண்டிங் ஜோதிடர் பாலாஜி ஹாசனை சந்தித்து ஜோதிடம் பார்த்த போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. திமுக தலைவர் முக ஸ்டாலினின் மனைவி, துர்கா ஸ்டாலின் ஆன்மீகத்தில் ரொம்பவும் ஈடுபாடு கொண்டவர். இதனால் அடிக்கடி கோயிலுக்கு சென்று வருவார். அவர் எப்போதெல்லாம் கோவிலுக்கு செல்கிறாரோ அப்போதெல்லாம் அது சம்பந்தமான போட்டோக்கள் இணையத்தில் உலா வரும். "இதுவா திமுகவினரின் பகுத்தறிவு கொள்கை" போன்ற விமர்சனங்களும் எழும். இதற்கு ஸ்டாலின் "எனது மனைவி கோவிலுக்கு செல்வதை நான் ஒருபோதும் தடுத்ததில்லை. நான் இந்துக்களுக்கு எதிரானவன் என்பது போன்ற தோற்றத்தை உண்டுபடுத்தி தவறான பரப்புரையை மேற்கொள்கின்றனர்" என்று பலமுறை விளக்கம் அளித்துள்ளார். சமீபத்தில்கூட அத்திவரதரை தரிசிக்க துர்கா ஸ்டாலின், காஞ்சிபுரம் சென்றுவந்தார். நேற்று மறைந்த கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாளும் அத்திவரதரை தரிசிக்க சென்றார். கருணாநிதி குடும்பத்தில் 2 பேர் அடுத்தடுத்து கோயில்களுக்கு சென்றது கூட பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில்தான், துர்கா ஜோதிடரை சந்தித்து பேசும் போட்டோக்கள் வெளியாகி உள்ளன. அகில இந்திய ஃபேமஸ் ஜோதிடர் பாலாஜி ஹாசனைதான் துர்கா சந்தித்து பேசி உள்ளார். இவர், ஜோதிடர்களுக்கான மாநாடுகளில் கலந்து கொண்டு பல பரிசுகளை பெற்றவர். ஜெகன்மோகன் அரியாசனம் ஏறுவார் என்றார்.. மோடிதான் திரும்பவும் பிரதமர் என்றார், உலக கோப்பையில் இந்தியா நூலிழையில் கோப்பையை தவற விடும் என்றார்.. இப்படி மொத்த விஷயத்தையும் ஏற்கனவே புட்டு புட்டு வைத்தவர். இவர் சொல்லி வரும் விஷயங்கள் எல்லாமே கிட்டத்தட்ட அப்படியே நடந்து வருவதால் எல்லாரும் ஷாக் ஆகி போனார்கள். இவரைதான் துர்கா வீட்டிற்கு அழைத்துள்ளார். வீட்டிலுள்ளவர்களின் ஜாதகத்தை கொடுத்து பார்க்க சொல்லி உள்ளார். அதற்கு அடுத்த முதல்வர் ஸ்டாலின்தான் என்று அடித்து சொன்னாராம் பாலாஜி. துர்காவும், ஜோதிடரும் சந்தித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.