சட்டவிரோத படகு பயணம் குறித்து விவாதித்த சிங்கள சேவகன் சுரேன் .!

breaking
இலங்கைக்கான ஆஸ்திரேலிய உயர் ஆணையர் டேவிட் ஹோலி மற்றும் இலங்கை வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் இடையே நடந்த சந்திப்பில் இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு மேற்கொள்ளப்படும் சட்டவிரோத பயணம் குறித்த பிரச்னை விவாதிக்கப்பட்டுள்ளது.  வட மாகாணத்தின் தற்போதைய நிலைக்குறித்தும் ஆஸ்திரேலிய அரசு மேற்கொண்டு வரும் வளர்ச்சி திட்டங்கள் குறித்தும் இச்சந்திப்பின் போது பேசப்பட்டுள்ளது.  சட்டவிரோத படகு பயணம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய உயர் ஆணையர், “சட்டவிரோத குடியேறிகளை கட்டுப்படுத்த  ஆஸ்திரேலிய அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது,” எனத் தெரிவித்திருக்கிறார்.  “அகதிகள் விவகாரத்தில் ஆஸ்திரேலிய அரசு கனடா போன்று மனிதாபிமான ரீதியில் அகதிகளை அனுமதிப்பது தொடர்பான கொள்கையை உருவாக்குவதன் மூலம் சர்வதேச அளவில் தனக்கான இடத்தை பெற்றுக்கொள்ள முடியும்,” எனக் கூறியுள்ளார் இலங்கை வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன்.  அத்துடன், சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்களின் செயல்பாடுகளை கட்டுப்படுத்த வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். 2013 முதல், ஆஸ்திரேலியாவின் தலையீட்டின் மூலம் ஆட்கடத்தல் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கையில் பல்வேறு நாடுகளில் 614 பேர் கைதாகியுள்ளனர். இதில் முதன்மையாக இலங்கையில் 489 கைதுகளும், இந்தோனேசியாவில் 66 கைதுகளும், மலேசியாவில் 48 கைதுகளும் நடந்துள்ளன. இந்தியாவிலும் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.