இனப்படுகொலை நாடுகளின் படைகள் இணைந்து கூட்டுப்பயிற்சி.!

breaking
இலங்கை  பிரித்தானிய படைகள் இணைந்து, ஒப்பரேசன் ஈட்டி (Operation Spear) என்ற பெயரில் கூட்டு இராணுவ ஒத்திகைகளை மேற்கொள்ளவுள்ளன. அதற்கமைய ஒக்டோபர் 27ஆம் திகதி முதல் நவம்பர் 04ஆம் திகதி வரை இந்தக் கூட்டுப் பயிற்சி 9 நாட்கள் நடைபெறவுள்ளன. இந்தக் கூட்டுப் பயிற்சி, பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர் என்ற தொனிப்பொருளில் இடம்பெறவுள்ளது. ஏதேனும் பயங்கரவாதத்துடன் தொடர்புடைய சம்பவங்கள் நிகழ்ந்தால், தமது நாட்டவர்களை வெளியேற்றுவதை அடிப்படையாகக்கொண்டு பிரித்தானியா இந்த கூட்டுப் பயிற்சியில் பங்கேற்கிறது. இலங்கை படையினர் மனிதாபிமான உதவிகள், இடர் மீட்பு மற்றும் அதனுடன் தொடர்புடைய விடயங்களை கற்றுக்கொள்வதற்கு இந்தப் பயிற்சியை பயன்படுத்திக்கொள்ளவுள்ளனர். இந்தக் கூட்டுப் பயிற்சிக்காக இலங்கையின் விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் மருத்துவமனைகள் பயன்படுத்தப்படவுள்ளன. ஏனைய மோதல் பகுதிகளில் பிரித்தானிய படைகள் பெற்றுக்கொண்ட உளவு மற்றும் காயமுற்றோரை மீட்பது தொடர்பான அனுபவங்களை இதன்போது வெளிப்படுத்தவுள்ளனர்.