அரசியல் கைதிகள் விடுவிக்காமைக்கான முழு பொறுப்பும் கூட்டமைப்பே-செ.கஜேந்திரன்!

breaking
இதுவரைக்கும் எந்த ஒரு தமிழ் அரசியல் கைதிகளும் விடுவிக்கப்படாமைக்கான முழுப்பொறுப்பிற்கும் காரணமானவர்கள் தமிழ்தேசியக்கூட்டமைப்பினர் என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார். இன்று யாழ் ஊடக அமையத்தில் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்.. அரசியல் கைதியான தேவதாசன் அவர்கள் சாகும் வரையிலான உண்ணாவிரத்தினை மேற்கொண்டுள்ளார் அவரது நிலமை கவலைக்கிடமாக காணப்படுகின்றது. தனது விடுதலையினைவலியுறுத்தி இன்று பத்து நாட்கள் கடந்துவிட்ட நிலையில் அவரின் விடுதலைதொடர்பில் சிறைச்சாலை அதிகாரிகளோ அல்லது அரசாங்கமோ அரசாங்கத்திற்கு முண்டுகொடுத்துக்கொண்டு நிக்கின்ற கட்சிகளே அல்லது வடக்கு கிழக்கில் தமிழர்களின் வாக்கில் தெரிவுசெய்யப்பட்ட எந்த மக்கள் பிரதிநிதிகளோ எந்தவிதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை இதனால் அவரின் உயிர் பிரியக்கூடிய நிலமை உடலுறுப்புக்கள் செயலிழந்து செல்லும் அபாயநிலையினை எட்டிஇருக்கின்றது இந்த பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் உலகத்திலேயே ஒரு கொடூரமான சட்டம் என்பதனை ஜக்கியநாடுகள் சபை சுட்டிக்காட் கடந்த 2015 ஆம் ஆண்டு இந்த சட்டம் நீக்கப்படவேண்டும் என பரிந்துரை ஸ்ரீலங்கா அரசிற்கு கொடுத்துள்ளது ஆனாலும் இன்றுவரை அதனை நீக்கவில்லை பயங்கரவாத சட்டத்தை நீக்கசொல்லி ஸ்ரீலங்கா அரசிற்கு முண்டுகொடுத்துக்கொண்டிருக்கும் தமிழ்தேசியக்கூட்டமைப்பு கூட இதுவரைக்கும் அழுத்தம் கொடுக்கவில்லை மாறாக ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு காலஅவகாசத்தினை பெற்றுக்கொடுத்தார்கள். காணாமல் போனவர்களுக்கு,படுகொலைசெய்யப்பட்டவர்களுக்கும் அரசியல் கைதிகளுக்கும் நீதி கிடைக்கவில்லை அரசியல் கைதிகள் விடையத்தில் ஒட்டுமொத்த இனமே வேதனையடைந்துள்ளது இன்னிலையில் அரசியல் கைதிகள் இன்றுவரைக்கும் விடுவிக்கப்படவில்லை என்றால் அதற்கான முற்றுமுழு பொறுப்பும் தமிழ்தேசியக்கூட்டமைப்பே என்பதை மக்கள் புரிந்துகொள்ளவேண்டும் தற்போதுள்ள ஸ்ரீலங்கா அரசாங்கத்தினை தாங்கிப்பிடித்துக்கொண்டிருக்கின்றார்கள் என்பதனையும் மக்கள் புரிந்துகொள்ளவேண்டும் என்றும் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார். சிறையில் உண்ணாவிரதம் இருந்துகொண்டிருக்கும் தேவதஸ் ஜயா அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் மீண்டும் பொதுமக்கள் பொது அமைப்புக்கள் இணைந்து போராட்டத்தில் ஈடுபடும் சூழல் உருவாகும். 2015 ஆம் ஆண்டு ஆட்சிமாற்றத்தின் போது கூட்டமைப்பினர் சொன்ன மைதிரிபாலசிறீசேனவிற்கு ஆதரவு கொடுங்கள் என்ற காரணத்தினால்தான் தமிழ்மக்கள் நம்பி வாக்களித்தார்கள் அன்று சொல்லப்பட்ட முதன்மை காரணம் ஜ.நா பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு மகிந்தறாஜபக்ச தயாராக இல்லை எனவே அவரை அந்த இடத்தில் இருந்து நீக்கினால்தான் புதிய அரசு அந்த விசாரணைகளுக்கு ஒத்துளைக்கும் என்ற அடிப்படையில் தான் மக்கள் வாக்களித்தார்கள் அதில் அரசியல் கைதிகளின் விடுதலை என்பது மிகமுக்கியமானதாக இருந்தது. இந்த நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக்கலத்தில் ஒரு தமிழ் அரசியல் கைதிகள்கூட தமிழ்தேசியக்கூட்டமைப்பின் முயற்சியால் விடுவிக்கப்படவில்லை இன்னிலையில் ரணில் அண்மையில் மூன்று ஆண்டுகளுக்கு தீர்வு பெற்றுத்தரபோகின்றேன் என்று கூறியிருப்பது கூட்டமைப்பினை வெல்லவைப்பதற்கும் ஜக்கியதேசிய கட்சி எதிர்காலத்தில் ஜனாதிபதி தேர்தலில் வாக்குகளை பெற்றுகொள்ளும் நோக்குடனும் இந்த பொய் வாக்குறுதியனை ரணில் வழங்கியுள்ளார். உடனடியாக அனைத்து அரசியல் கைதிகளும் நிபந்தனைகள் இன்றி விடுவிக்கப்படவேண்டும் என்றும் கஜேந்திரகுமார் கேட்டுக்கொண்டுள்ளார்.