மீன்வாடி அமைக்க முல்லைத்தீவில் கட்டுப்பாடு: கட்டுப்படுமா பேரினவாதம்

breaking
  வடதமிழீழம்: முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில், பிர­தே­ச­சபை மற்­றும் பிர­தே­ச­செ­ய­ல­கம் ஆகி­ய­வற்­றின் அனு­ம­தி­யு­ட­னேயே இனி மீன­வர்­க­ளுக்­கான வாடி அமைக்­க­ மு­டி­யு­மென்று கரை­து­றைப்­பற்று பிர­தேச அபி­வி­ருத்­திக் குழுக்­கூட்­டத்­தில் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. இந்த ஆண்­டுக்­கான முத­லா­வது கரை­து­றைப்­பற்­றுப் பிர­தேச அபி­வி­ருத்­திக்­கு­ழுக் கூட்­டத்தில், வடக்கு மாகா­ண­சபை முன்­னாள் உறுப்­பி­னர் து.ரவி­க­ரன், அனு­ம­தி­யின்றி அமைக்­கப்­பட்­டுள்ள மீன­வர் வாடி­கள் தொடர்­பில் கேள்வி எழுப்­பி­யி­ருந்­தார். இது பற்றி நீண்­ட­நே­ர­மாக இடம்­பெற்ற பல­ரின் கருத்­து­க­ளை­ய­டுத்து, பிர­தே­ச­சபை மற்­றும் பிர­தேச செய­ல­கம் என்­ப­வற்­றின் அனு­மதி பெறப்­பட்டே இனி வாடி­கள் அமைக்­கப்­ப­ட­வேண்­டும் எனத் தீர்­மா­னிக்­கப்­பட்­டது. மேலும் வெளி­மா­வட்ட மீன­வர்­க­ளின் வரு­கை­யைக் குறைக்­கும் வகை­யி­லும், வெளி­மா­வட்­டத்­தி­லி­ருந்து வந்து சட்­ட­வி­ரோ­த­மாக வாடி அமைத்து தொழில் புரி­ப­வர்­க­ளின் வாடி­களை அகற்­றும் நோக்­கி­லுமே இவ்­வா­றா­ன­தொரு தீர்­மா­னம் நிறை­வேற்­றப்­பட்­டது என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது.