வடக்கிற்கான கடுகதி சேவை இன்று ஆரம்பம் பல உயிர்கள் ?

breaking
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை – கொழும்புக் கோட்டை இடையேயான தொடருந்து சேவை அதிகரிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா ரயில்வேஸ் அறிவித்துள்ளது. இதற்கமைய இரவு நேர தபால் தொடருந்து சேவைகள் புறப்படும் நேரம் மாற்றப்படுவதுடன் மாலை நேர கடுகதி சேவை புதிதாக ஆரம்பிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 4081 என்ற இலக்க தொடருந்து நாளாந்தம் கொழும்பு கோட்டையில் காலை 8.50 ற்கு புறப்பட்டு யாழ்ப்பாணம் ரயில் நிலையத்தை 6.31 ற்கு சென்றடையும். இதே போன்று 4087 இலக்க தொடருந்து நாளாந்தம் கொழும்பு கோட்டையில் மாலை 7.15ற்கு புறப்பட்டு யாழ்ப்பாணம் ரயில் நிலையத்தை மறுநாள் அதிகாலை 4.20 மணிக்கு சென்றடையும் 4082 என்ற இலக்க ரயில் நாளை மறுதினம் முதல் நாளாந்தம் யாழ்ப்பாணம் ரயில் நிலையத்தில் இருந்து காலை 6.25 ற்கு புறப்பட்டு மாலை 4.00 மணிக்கு கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தை வந்தடையும். இதே போன்று இலக்கம் 4088 என்ற தொடருந்து நாளை மறுதினம் முதல் நாளாந்தம் யாழ்ப்பாணம் ரயில் நிலையத்தில் இருந்து மாலை 6.40 க்கு புறப்பட்டு கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தை அதிகாலை 4 மணிக்கு வந்தடையும் என்று சிறிலங்கா ரயில்வே தெரிவித்துள்ளது. இந்தப் புதிய மாற்றம் ஓகஸ்ட் முதலாம் திகதி இன்று தொடக்கம் நடைமுறைக்கு வருகிறது. வடக்கின் புகையிரத பாதை மார்க்கத்தில் பல உயிர்கள் காவுகொள்ளப்பட்ட நிலையில் மேலும் புகையிரத சேவையினை அதிகரித்துள்ளமை வடக்கில் இன்னும் எத்தனை உயிர்கள் பறிக்கப்படும்என்ற அச்சத்தில் மக்கள் காணப்படுகின்றார்கள்.