கோட்டாவின் நிகழ்வில் இன்டர்போல் குற்றவாளி உதயங்க !

breaking

ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதர் உதயங்க வீரதுங்க, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் ‘வெளிச்சம்’ என்ற பிரசார நிகழ்வில் கலந்துகொண்ட காணொளி தற்போது வெளியாகியுள்ளது.

இன்டர்போல் கைது அறிவிப்பு விடுக்கப்பட்ட உதயங்க வீரதுங்க, நேற்று (வெள்ளிக்கிழமை) டுபாயில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தமை தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

2006 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பதவிக்காலத்தில், மிக் 27 ரக விமானங்களின் கொள்வனவின் போது, இடம்பெற்றதாக கூறப்படும் 14 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி மோசடி குறித்த குற்றச்சாட்டு உதயங்கவின் மீது சுமத்தப்பட்டது.

இதனை அடுத்து கடந்த 2016 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 16 ஆம் திகதி ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதர் உதயங்க வீரதுங்கவை கைது செய்யகோரி இன்டர்போல் சிவப்பு எச்சரிக்கையை கொழும்பு கோட்டை நீதிமன்றம் பிறப்பித்திருந்தது.

கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை உதயங்க வீரதுங்க ரஷ்யாவிற்கான இலங்கைத்து தூதுவராக கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.