விளையாட்டு துப்பாக்கியுடன் இளைஞன் ஒருவன் கைது.!

breaking
ஹிக்கடுவ, தொடம்துவ  பகுதியில் ஒரு தொகை ஹெரோயின் மற்றும் விளையாட்டு துப்பாக்கியுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் முச்சக்கர வண்டி ஒன்றை பரிசோதனை செய்தபோது குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரிடம் இருந்து 400 மில்லிகிராம்  ஹெரோயினும் விளையாட்டுத் துப்பாக்கி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. தொடம்துவ பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞன் ஒருவனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் ஹிக்கடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.