மட்டக்களப்பில் வறட்சி 25ஆயிரம் குடும்பங்கள் பாதிப்பு!

breaking
மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் வறட்சியினால் 25005 குடும்பங்களைச் சேர்ந்த 82570 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் மூலம் 26 இலட்சம் ரூபா நிதியில் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருவதாக மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார். மாவட்டத்தில் கிரான், வாழைச்சேனை, ஓட்டமாவடி, வெல் லாவெளி, செங்கலடி,ஏறாவூர் நகரம், களுவாஞ்சிகுடி, வாகரை, வாழைச் சேனை மத்தி, வவுணதீவு ஆகிய பிரதேச செயலகப்பிரிவுகளில் 99 கிராம சேவகர் பிரிவுகள் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளதாகவும் மாவட்ட அவர் மேலும் தெரிவித்தார். இத்துடன் 7723 ஏக்கர் நெல் வயலும் 629 ஏக்கர் மேட்டு நிலபயிர்களும் 750 நன்னீர் மீனவர்களும், கால்நடை வளர்ப்பும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.