கடந்த மூன்று நாட்கள் கடும் காற்று கடற்தொழிலாளர்கள் பாதிப்பு!

breaking
முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்கள் வீசிவரும் கடும் காற்றினால் கடற்தொழிலாளர்களின் கடற்தொழில் நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
கடும் காற்று காரணமாக கொக்குளாய் தொடக்கம் செம்மலை,அளம்பில்,நாயாறு,தீர்;த்தக்கரை,கள்ளப்பாடு,முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால்,வலைஞர்மடம்,பொக்கணை,மாத்தளன் வரையான கரையோரங்களில் உள்ள கடற்தொழிலாளர்கள் தொழில் நடவடிக்கைக்கு செல்லவில்லை என மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளார்கள்.
இவ்வாறான நிலையிலும் வெளிமாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் நடுக்கடலில் சட்டவிரோ கடற்தொழில் நடவடிக்கையினை மேற்கொண்டு வருவதை அவதானிக்கமுடிந்துள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
குறிப்பாக வெளிச்சம் பாச்சி,மற்றும் தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளை பயன்படுத்தி கடற்தொழில் நடவடிக்கையில்தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றார்கள்.
இவ்வாறான நிலையில் மக்கள் கடல் உணவினை அதிகவிலைகொடுத்து வாங்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்