பின்லாந்தில் நடைபெற்ற செந்தளிர் தமிழர் விளையாட்டு விழா!

breaking

கடந்த 04/08/2019 அன்று பின்லாந்தில், செந்தளிர் தமிழர் விளையாட்டு விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவை பின்லாந்து தமிழர் பேரவை நெறிப்படுத்தி நடாத்தியது. தமிழீழ தேசியக் கொடியேற்றலுடன் ஆரம்பமாகிய விழாவில் , செந்தளிர் என்ற பாடல் ஒலிப்பேழை வெளியிடப்பட்டது.

செந்தளிர் பாடல் ஒலிக்க விடப்பட்டு, விளையாட்டு ஒழுங்குகளிற்கு அமைவாக, செந்தளிர் தீபம் ஏற்றப்பட்டது. பின்லாந்து தமிழர் பேரவை நிர்வாகிகளும், செந்தளிர் விளையாட்டு விழா நெறிப்படுத்துனர்களும் தீபத்துடன் மைதானத்தை சுற்றி ஓடி வந்து விழாவை ஆரம்பித்து வைக்க, வீரர்களின் சீரான அணிவகுப்பு கண்ணைக்கவர்ந்தது.

விளையாட்டுகளின் வரிசையில், உடற்பயிற்சி காட்சி நிகழ்வு, சுவட்டு நிகழ்வுகள், குழு விளையாட்டுக்கள், வினோத உடை நிகழ்வு, உதைபந்தாட்டம், கிளித்தட்டு, கண்கட்டிய நிலையில் முட்டியுடைத்தல், அஞ்சலோட்டம், கயிறிழுத்தல் போன்றன சிறப்பாக நடைபெற்றது . இரவு 8.00 மணியளவில் விழா இனிதே நிறைவுற்றது.