இன்று காலை மகிந்தவினை சந்தித்த அமெரிக்க அதிகாரிகள்!

breaking
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய, ஆசிய விவகாரங்களுக்கான முதன்மை பிரதி உதவிச் செயலாளர் அலிஸ் வெல்ஸ் ஸ்ரீலங்காவிற்கு விஜயம் செய்துள்ளார். தெற்காசியாவுக்கு உத்தியோகப்பூர்வ பயணம் மேற்கொள்ளும் அவர், குறித்த விஜயத்தின் ஓர் அங்கமாக இன்று (11.08..19) காலை ஸ்ரீலங்காவிற்கு விஜயம் செய்துள்ளார். இன்று காலை எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். விஜேராமவில் உள்ள மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின்போது முன்னாள் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் மற்றும் ஸ்ரீலங்கா அமெரிக்கத் தூதுவர் அலெய்னா பி.ரெப்லிட்ஸ் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் யாரென இன்றைய தினம் இடம்பெறவுள்ள தேசிய மாநாட்டில் மஹிந்த ராஜபக்ஷ அறிவிக்கவுள்ளார். இந்நிலையில் இந்த மாநாட்டிற்கு முன்னதாக இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.