அமெரிக்காவுடனான உடன்பாடு நிறுத்தி வைக்க உத்தரவு!

breaking
அமெரிக்காவுடன் மிலேனியம் சவால் நிதிய உடன்பாட்டை செய்து கொள்ளும் திட்டத்தை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஆறு மாதங்களுக்கு இடைநிறுத்தி வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். கடந்த ஓகஸ்ட் 1ஆம் நாள் நடந்த தேசிய பொருளாதார சபை கூட்டத்திலேயே சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இந்த அறிவுறுத்தலை வழங்கினார். மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சர்கள் பலரும் பங்கேற்றிருந்தனர். மிலேனியம் சவால் நிதிய உடன்பாட்டின் மூலம், சிறிலங்காவின் நெடுஞ்சாலை அபிவிருத்தி உள்ளிட்ட உட்கட்டமைப்பு  திட்டங்களுக்காக 480 மில்லியன் டொலரை அமெரிக்கா கொடையாக வழங்கவிருந்தது, எனினும், எதிர்க்கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டு வரும் நிலையிலேயே சிறிலங்கா அதிபர் இந்த முடிவை எடுத்துள்ளார்.