அனுமதியியுடன் செஞ்சோலை நினைவுத்தூபி அமைக்கலாம் புதுக்குடியிருப்பு பொலீசார்!

breaking
பிரதேச சபையின் அனுமதியியுடன் செஞ்சோலை நினைவுத்தூபி அமைக்கலாம் புதுக்குடியிருப்பு பொலீசார்! சிறிலங்கா விமானப்படையினரின் விமான தாக்குதலில் கொல்லப்பட்ட மாணவர்களின் நினைவு தூபி ஒன்று வள்ளிபுனம் பகுதியில் அமைக்கப்பட்டு வந்தது இந்த நினைவுத் தூபியில் மாணவர்களின் உடைய படங்களை பதிப்பதற்கு தடை விதித்துள்ள புதுக்குடியிருப்பு பொலீசார் குறித்த பணிகளை முன்னெடுத்தவர்கள் சிலரை இன்று(11.08.19) காலை புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையம் வருமாறு அழைத்திருந்துள்ளார்கள். இன்னிலையில் குறித்த நினைவுத்தூபிஅமைக்கும் பணிக்கான பிரதேச சபையின் அனுமதி கடந்த 31.07.19 அன்று ஒரு ஆண்டு அனுமதி முடிவடைந்த நிலையில் எதிர்வரும் 14.08.19 அன்று 13 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு நினைவிற்கொள்ளப்படவுள்ள நிலையில் தூபியினை அமைக்கும் பணியினை முன்னெடுத்து வருபவர்களுக்கு புதுக்குடியிருப்பு பொலீசார் அழைத்து அனுமதி இன்று கட்டிட பணிகளை முன்னெடுக்கவேண்டாம் என்றும் பிரதேச சபையின் அனுமதியுடன் கட்டிட பணிகளை முன்னெடுக்கசொல்லியுள்ளார்கள். இதேவேளை குறித்த நினைவுத்தூபில் உயிரிழந்தவர்களின் படமோ அல்லது பெயரோ பொறிக்கமுடியாது என்றும் பொலீசார் தெரிவித்துள்ளர்கள். முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ளிட்ட ஏனைய பகுதிகளில் படையினர் அமைக்கும் நினைவுத்தூபிகள் பிரதேச சபையின் அனுமதி எடுத்தா கட்டப்படுகின்றது இது இந்த நினைவு நிகழ்வினை குழப்பும் முயற்சியில் பொலீசார் ஈடுபட்டுள்ளதாக விசாரணைக்கு சென்றவர்கள் தெரிவித்துள்ளார்கள். பொலீசாரின் விசாரணைக்காக வன்னிக்குறேர் நினைவேந்தல் குழுவினை சேர்ந்த முல்லைஈசன்,சந்திரறூபன் உள்ளிட்ட மூவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.