'உகண' விநியோகக் கப்பலை மூழ்கடித்த கடற்கரும்புலிகள்: உயிராயுதங்கள்

breaking
  தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் அணியின் விநியோக நடவடிக்கைக்கு இடையூறாக இருந்த எதிரியின் பாரிய கப்பல்களை தாக்கி வெற்றிகரமாக மூழ்கடித்து வீரகாவியம் படைத்த கரும்புலிகளின் தாக்குதல் தொடர்பான விளக்கம்...! 26.06.2000 அன்று கடற்படையின் பாரிய கடற்கண்காணிப்புக்கு மத்தியில் இடம்பெற்ற உகன கப்பல் மீதான கடற்கரும்புலித் தாக்குதல் . சர்வதேச விநியோக நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் கப்பல் மற்றும் படகு சந்தித்து பொருட்கள் மாற்றுமிடமிடத்திற்கு (முல்லைத்தீவிலிருந்து கிட்டத்தட்ட எழுபத்தைந்து கடல்மைல் உயர)அண்மையான தூரத்தால் கடற்புலிகளின் தாக்குதலுக்கு அஞ்சியும் கடற்புலிகளின் ஆழ்கடல் விநியோகத்தைக் கட்டுப்படுத்தவும் திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கான விநியோக நடவடிக்கையில் கடற்படையின் பாரிய கப்பல்களான சக்தி லங்காமுடித உகன கப்பல்களும் தரையிறங்குகலங்களும் இவைகளுக்கு உதவியாக அதிவேக டோறாப் படகுகளும் அடிக்கடி ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.அதுமட்டுமல்லாமல் பத்துக் கடல்மைல் தொடக்கம் அறுபது கடல்மைல் தூரத்தைக் கண்காணிப்பதற்காக அதிவேகடோறாப் படகுகளும் அறுபது கடல்மைல்களுக்கப்பால் கண்காணிப்பதற்காக வீரயா மற்றும் ஆழ்கடல் கலங்களும் ஈடுபடுத்தப்பட்டு கடற்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட ஆழ்கடல் விநியோகத்தை இல்லாமல் பண்ணுவதற்காக கடற்படையினரால் வர்ணகீர கடல் கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனால் ஆழ்கடல் விநியோகம் பாதிக்கப்பட்டது.இதனைக் கருத்திலெடுத்த தலைவர் அவர்கள் கடற்புலிகளுக்கு அக் கடற்படைவிநியோக அணி மீது தாக்குதல் நடாத்தி கடற்புலிகளின் ஆழ்கடல் விநியோக நடவடிக்யைத் தொடருமாறும் அதற்கான தாக்குதல் திட்டத்தையும் கொடுத்தது மட்டுமன்றி சில ஆலோசனைகளையும் கொடுத்தார். அதற்கமைவாக கடற்புலிகளின் கட்டளை அதிகாரிகளான லெப்.கேணல் ரஞ்சன் லெப்.கேணல் பழனி மேஐர் ஆழியன் ஆகியோரின் தலைமையிலான சண்டைப்படகுகளும் இரண்டு கடற்கரும்புலிப் படகுகளும் சென்று ஆழ்கடலால் இராணுவத் தளபாடங்கள் மற்றும் படையினருக்குத் தேவையான பொருட்களுடன் வரும் கப்பலை இம்மூன்று சண்டைப்படகுகளால் தாக்கி வழியமைத்துக் கொடுக்க கரும்புலிப்படகுகளால் தாக்கி கப்பலை மூழ்கடிப்பதாகும்.அதேநேரம் மேலதிகமாக வரும் கடற்படையினரை வழிமறித்து மறிப்புச்சமரை தொடுப்பதற்காக லெப்.கேணல் பகலவன் தலைமையிலான ஒரு தொகுதி சண்டைப் படகுகளும் இவர்களுக்கு உதவியாக கரும்புலிப்படகுகளும் நிலைகெண்டன.இவ்வளவு கண்காணிப்புக்களுக்கு மத்தியிலும் கடுமையான தென்மேற்க்குப் பருவக்காற்றுக்குள்ளும் இந்தத் தடைகளை உடைத்து தமிழீழத்திற்க்கு பலம் சேர்க்கின்ற நடவடிக்கைகளைத் தொடரவேண்டும் என்கிற நோக்கோடும் . 25.06.2000 அன்று மாலை ரஞ்சன் பழனி ஆழியன் ஆகியோர் தலைமையிலான சண்டைப்படகுகளும் கடற்கரும்புலிகளான சூரன் மற்றும் நல்லப்பன் தலைமையிலான கடற்கரும்புலிப்படகுகளும் சென்று முல்லைத்தீவுக்கு உயர அறுபது கடல்மைல் தூரத்தில் நிற்க அந்தநேரத்தில் திருகோணமலையிலிருந்து கடற்படையின் விநியோகத் தொடரணி வருவதாக இப்படகுகளுக்கு அறிவிக்க தயார்நிலையிலிருந்த படகுகள் சீரற்ற காலநிலை மற்றும் கடும் காற்றிற்க்கும் மத்தியில் ஒருவாறு கப்பலை இணங்கண்டு அக்கப்பலைப் பின்தொடர்ந்த (26.06.2000 அன்று அதிகாலை)பழனி கப்பலின்மீது தாக்குதலைத் தொடுத்து வழியமைத்துக் கொடுக்க சூரனின் கரும்புலிப்படகு கப்பலின் மீது மோதியது இம்மோதலால் கப்பல் நிலைகுலைய கப்பலிலிருந்து செறிவான தாக்குதல் நடாத்தியவண்ணமிருக்க பழனி ரஞ்சன் மற்றும் ஆழியனது படகால் தாக்குதலை தொடுத்து வழியமைத்துக் கொடுக்க நல்லப்பனது கரும்புலிப்படகு கப்பல் மீது மோத கப்பல் வெடித்துச் சிதறி மூழ்கியது. சுமார் எட்டு மணிநேரம் இடம்பெற்ற கடும் சமரின் நடுவே தமது வெடிமருந்துகள் நிரப்பப்பட்ட படகுகளால் குறித்த கப்பலை கடற்கரும்புலிகள் தகர்த்து மூழ்கடித்தனர். இதன்போது சிறிலங்கா கடற்படையின் டோறா பீரங்கிப் படகு ஒன்றும் கடுமையாகச் சேதமடைந்தது. இத்தாக்குதலின்போது ஆறு கடற்கரும்புலிகள் தமது இன்னுயிர்களை ஈகம் செய்தனர். அவர்களின் விபரம் வருமாறு கடற்கரும்புலி லெப்.கேணல் ஞானேஸ்வரன் (ஞானக்குமார்) (அழகப்போடி விநாயகமூர்த்தி – திக்கோடை, மட்டக்களப்பு) கடற்கரும்புலி மேஜர் சூரன் (இராசதுரை ரவீந்திரன் – பூநகரி, கிளிநொச்சி) கடற்கரும்புலி மேஜர் நல்லப்பன் (வேலுப்பிள்ளை ராசன் – கல்வியங்காடு, யாழ்ப்பாணம்) கடற்கரும்புலி மேஜர் சந்தனா (குணசிங்கம் கவிதா – மயிலிட்டி, யாழ்ப்பாணம்) கடற்கரும்புலி கப்டன் இளமதி (கனகநாயகம்பிள்ளை ஜெயசித்திரா – வேலணை, யாழ்ப்பாணம்) கடற்கரும்புலி கப்டன் பாமினி (பரராசசிங்கம் விஜயலட்சுமி – காரைநகர், யாழ்ப்பாணம்) தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களையும் போராட்ட காலத்தில் வீரகாவியமான ஏனைய அனைத்து மாவீரர்களையும் நெஞ்சில் நிறுத்தி பூசித்து வணங்கி நினைவு கூறுவோம். தமிழீழப் போராட்ட வரலாற்றின் சுவடுகளுடன்.... "ராஜ் ஈழம்" "தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்"