அணுஉலை வெடிப்பில் 5 விஞ்ஞானிகள் பலி! ஒப்புக்கொண்டது ரஷ்யா.!

breaking
கடந்த வாரம் வெள்ளை கடலில் ஐந்து ரஷ்ய விஞ்ஞானிகள் பலியாக காரணமாக இருந்த தோல்வியுற்ற ஏவுகணை சோதனை ஒரு சிறிய அணு உலை சம்பந்தப்பட்ட வெடிப்பு என்று ரஷ்ய அதிகாரிகள் ஞாயிறன்று ஒப்புக்கொண்டனர். ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் வெளியிடப்பட்ட காணொளி நேர்காணலில், விஞ்ஞானிகள் பணியாற்றிய அணு ஆராய்ச்சி நிறுவனத்தில் இந்த விபத்து ஒரு மணி நேரம் மட்டுமே நீடித்த கதிர்வீச்சு அளவுகளில் இரண்டு மடங்கு உயர்வை ஏற்படுத்தியுள்ளதாக ரஷ்ய அதிகாரிகள்   கூறினார். மூடப்பட்ட நகரமான சரோவ் நகரில் உள்ள நிறுவனத்தின் அதிகாரிகளான வியாசஸ்ஸ்லாவ் சோலோ யேவ், அணு வல்லுனர்கள் அங்கே இறந்த விஞ்ஞானிகள் என்ன வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை சரியாக கூறவில்லை, ஆனால் அணுசக்தியில் இயங்கும் எரிசக்தி  நிறுவனத்தில் வேலை செய்தனர் என்றார்.