ஆமைக்கறி சாப்பிட்ட 7 பேர் பரிதாப பலி

breaking

தான்சானியா நாட்டின் ஜன்ஜிபாரில் உள்ள பெம்பா தீவு பகுதியில் வசித்து வரும் சிலர் கடல் ஆமைக்கறியை சாப்பிட்டு உள்ளனர்.  

இதில் ஒரே குடும்பத்தின் 3 குழந்தைகள் உடல்நலம் பாதித்து உயிரிழந்து உள்ளதுடன்,  22 பேர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.  

கடல் ஆமைக்கறியில் விஷம் உள்ளது என சந்தேகிக்கப்படுகிறது.  இதனை தொடர்ந்து, பொலிஸார் அதன் மாதிரிகளை சேகரித்து பரிசோதனைக்காக அனுப்பி வைத்து உள்ளனர்.  

பெம்பா தீவு பகுதியில் கடல் ஆமைக்கறியை சாப்பிட்டு பலர் உயிரிழந்த சம்பவங்கள் கடந்த காலங்களில் உள்ளன.

இந்த சம்பவத்தில் உயிரிழப்பு 7 ஆக உயர்ந்து உள்ளது.  38 பேர் சிகிச்சை பெற்ற நிலையில் பலர் வீடு திரும்பியுள்ளனர்.  

கிழக்கு ஆப்பிரிக்க நாடான மடகாஸ்கரில் கடந்த மார்ச் மாதம் ஆமைக்கறியை சாப்பிட்ட 19 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.