இனப்படுகொலையாளி கோதபாயவிற்கு இராணுவம், காவல்துறை ஆதரவு?

breaking

 இனப்படுகொலையாளி    மகேஸ் சேனாநாயக்க மற்றும் பதில் காவல்துறை மா அதிபர் சீ.டி. விக்ரமரட்ன ஆகியோர் இனப்படுகொலையாளி  கோதபாய ராஜபக்சவிற்கே ஆதரவளித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இரட்டைக் குடியுரிமையுடைய கோதபாய ராஜபக்ச உரிய ஆவணங்களை சமர்ப்பிக்காது இலங்கை கடவுச்சீட்டு பெற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிவித்து காவல்துறை தலைமையகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த முறைப்பாடு புரவசிபலய அமைப்பின் காமினி வியாங்கொடவினால் செய்யப்பட்டிருந்தது.

இந்த முறைப்பாடு தொடர்பில் காவல்துறை தலைமையகம் குற்ற விசாரணைப் பிரிவிற்கு அறிவித்து நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

எனினும், இந்த விசாரணைகளை பதில் காவல்துறை மா அதிபர் இடைநிறுத்தியுள்ளார். இந்தப் பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தேவையில்லை, பிறகு பார்த்துக்கொள்வோம் என பதில் பொலிஸ் மா அதிபர் அதிகாரிகளிடம் கூறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, ஜனாதிபதி வேட்பாளராக கோதபாயவின் பெயர் அவிறிக்கப்பட்ட உடன் தற்போதைய இராணுவத் தளபதி மகேஸ் சேனாநாயக்க கோதபாவிற்கு செய்தி ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க ஊடாக இந்த தகவல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கோதபாயவிற்கு தேவையானவற்றை செய்து கொடுப்பதாக மகேஸ் சேனாநாயக்க அறிவித்துள்ளார்.