மகிந்தவுடன் இணக்கப்பாடு இல்லை, சஜித்துக்கு ஆதரவு : மைத்திரி தகவல்

breaking
தமிழர்களை இன அழிப்பு செய்த ஶ்ரீலங்காவின் முன்னாள் ஜனா­தி­ப­தியும் எதிர்க்­கட்சித் தலை­வ­ரு­மான மஹிந்த ராஜ­ப­க்ஷ­வுடன் இணக்­கப்­பாடு எதுவும் காணப்­ப­ட­வில்லை. அவ­ருடன் இணக்­கப்­பாடு காணப்­பட்­ட­தாக வெளி­யான செய்தி தவ­றா­ன­தாகும் என்று தற்போதைய ஶ்ரீலங்கா ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­துள்ளார். ஜனா­தி­பதி செய­ல­கத்தில் நேற்­றுக்­காலை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் அமைச்­ச­ர­வைக்­கூட்டம் இடம்­பெற்­றது. அமைச்­ச­ரவைக் கூட்­டத்தை அடுத்து ஜனா­தி­ப­தியை சந்­தித்த ஐக்­கிய தேசிய முன்­ன­ணியைச் சேர்ந்த சிறு­பான்­மை­யின அமைச்சர் ஒருவர் ஜனா­தி­ப­தி­யிடம் இந்த விடயம் தொடர்பில் கேள்வி எழுப்­பி­ய­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­தி­ருக்­கின்றார். மஹிந்த ராஜ­ப­க்ஷ­வுடன் நீங்கள் நடத்­திய சந்­திப்­பின்­போது பொது­ஜன பெர­மு­னவில் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ருக்கு ஆத­ரவு தெரி­விப்­ப­தற்­கான இணக்கம் காணப்­பட்­ட­தா­கவும் அதற்கு பிரதி உப­கா­ர­மாக உங்­க­ளுக்கு உரிய பத­வியை தரு­வ­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் ஆங்­கிலப் பத்­தி­ரி­கை­யொன்றில் செய்தி வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. இவ்­வா­றான இணக்கம் காணப்­பட்­டுள்­ளதா? பொது­ஜன பெர­முன வேட்­பா­ளரை நீங்கள் ஆத­ரிக்­கப்­போ­கின்­றீர்­களா என்று அந்த அமைச்சர் ஜனா­தி­ப­தி­யிடம் கேள்வி எழுப்­பி­யுள்ளார். இதற்குப் பதி­ல­ளித்த ஜனா­தி­பதி அவ்­வா­றான எந்த இணக்­கப்­பாடும் ஏற்­ப­ட­வில்லை. அவ்­வாறு வெளி­யா­கிய செய்­திகள் தவ­றா­னவை.. அதனை நம்­ப­வேண்டாம் என்று கோரி­யுள்ளார். இதன்­போது பொது­ஜன பெர­மு­ன­விற்கு நீங்கள் ஆத­ரவு வழங்­காது எமது கூட்­ட­ணிக்கு ஆத­ரவை வழங்­க­வேண்டும் என்றும் அந்த அமைச்சர் கோரி­ய­போது ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸ நியமிக்கப்பட்டால் இந்த விடயத்தில் நடுநிலைமை வகிப்பது குறித்து பரிசீலிக்க முடியும் என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.