Take a fresh look at your lifestyle.

தொடர்ந்தும் எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த! ஐ.தே.க. கிளப்பும் பிரச்சினை

e;jசுதந்திரக் கட்சி சார்பில் எம்.பி.யாகி அதனடிப்படையில் எதிர்க்கட்சித் தலைவராகவுள்ள மஹிந்த ராஜபக்ஷ இப்போது பிறிதொரு கட்சியின் தலைமைப் பதவியை ஏற்றுள்ளமையால் எழுந்துள்ள அவரது உறுப்புரிமை தொடர்பான முரண்பாடு குறித்து அடுத்த நாடாளுமன்ற அமர்வில் ஐ.தே.க. முறைப்பாடொன்றை முன்வைக்கவுள்ளதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அக்கூட்டமைப்பின் சார்பாகவே அவர் எதிர்க்கட்சி தலைவர் பதவியையும் பெற்றுள்ளார்.

தற்போது நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத கட்சியொயான்றின் தலைமைப் பொறுப்பை அவர் ஏற்றுக் கொண்டுள்ளார். நாடாளுமன்ற சம்பிரதாயங்களின் பிரகாரம் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியைத் தொடர சட்டபூர்வமாக இடம் இருக்கின்றது என்றால் அதனை சபாநாயகர் அறிவிக்க வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.