Take a fresh look at your lifestyle.

விக்கியின் கருத்தில் மக்கள் தெளிவாக இருக்கவேண்டும்-செ.கஜேந்திரன்!

கடந்த 2006 ஆம் ஆண்டு இதே நாள் விமானப்படையிரின் குண்டு வீச்சில் உயிரிழந்த 53 செஞ்சோலை மாணவர்களின் 13 ஆம் ஆண்டு வணக்க நிகழ்வு தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் குண்டு வீச்சில் உயிரிழந்த மாணவி ஒருவரின் தாயர் பொதுச்சுடரினை ஏற்ற தொடர்ந்து சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் நினைவுரையினை தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் அவர்கள் நிகழ்த்தியுள்ளார்.
இந்தியா தான் விரும்பும் ஒருவரை ஜனாதிபதியாக தெரிவுசெய்யவிரும்பும் என்றால் அவருக்கு தமிழ்மக்கள் வாக்குகள் விழவேண்டும் என்று எதிர்பாக்கின்றார்கள் என்றால் இந்திய நாடாளுமன்றத்தில் தமிழ்தேசத்தினையும் அதனது இறைமையினையும் அங்கிகரிக்கவேண்டும் அதாவது தமிழ்மக்கள் பேரவையினால் தயாரிக்கப்பட்டுள்ள தீர்வுத்திட்டத்தின் அடிப்படையில் அரசியல் தீர்வு பெற்றுத்தரப்படும் என்ற உத்தரவாதத்தினை இந்தியா தரவேண்டும் அப்படிஒரு செயல்பாடு நடைபெறுகின்றபொழுது இந்தியா விரும்புகின்ற ஒருவரை ஜனாபதி ஆக்குவதற்கு எங்கள் மக்களை வாக்களியுங்கள் என்று கோரமுடியும் அதனை செய்வதற்கு இந்தியா தயார் இல்லைஎன்றால் இந்த வாக்களிப்பில் கலந்துகொள்வதற்கு எந்த அர்த்தமும் இல்லை  இப்போது கூட்டமைப்பு மக்கள் மட்டத்தில் அம்பலப்படுத்தப்பட்டு விட்டது கூட்டமைப்பு துரோகம் செய்கின்றது என்று மக்கள் இனம் கண்டுகொண்டார்கள்.
படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு நினைவேந்தல் என்பது நீதி பெற்றுக்கொடுப்பதாக இருக்கவேண்டும் றாஜபக்சவினையும்,கோத்தபாயறாஜபக்சவினையும் ஜக்கியநாடுகள் மனிதஉரிமைகள் ஆணைக்குழுவரை சென்று சர்வதேச விசாரணை வேண்டாம் என்று சொல்லி பாதுகாத்த கூட்டமைப்பினர் இந்த நினைவேந்தலை செய்வது என்பது அரசியல் லாபம் தேடுவதற்கா அல்லது நீதி பெறுவதற்காக நினைவேந்தலை செய்வதற்கு எந்த அருகதையும் இல்லை.

விக்கினேஸ்வரன் ஜயா தமிழ்மக்களுக்கு தான் நீதிசெய்யப்போகின்றேன் நேர்மைசெய்யபோகிறேன் என்று சொல்லிக்கொண்டிருக்கின்றார் அவரை நாம்பி நாங்களும் தமிழ்மக்கள் பேரவையில் இணைந்து செயற்பட்டோம்
2016 தயாரிக்கப்பட்ட தீர்வுத்திட்டம் துரதிஸ்டவசமாக விக்னேஸ்வரன் ஜயா அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை அதனை அரசிடம் கையளிக்க அவர் மறுத்துவிட்டார்.

அந்த தீர்வுத்திட்டத்தினை நிராகரிக்கக்கூடிய வகையில் மாகாணசபையில் தீர்வுத்திட்டம் ஒன்றினை தயாரித்து அதில் தமிழ்தேசம் இறைமை என்கின்ற விடையத்தினை கைவிட்டு சம்மந்தன் பாராளுமன்றத்தில் முன்னெடுக்கின்ற அரசியலிற்கு இடைஞ்சல் இல்லாமல் அரசாங்கத்திடம் நேரடியாக கொண்டுசென்று கொடுத்துள்ளார்.
அண்மையில் விக்னேஸ்வரன் அவர்கள் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கருத்து சொல்லியுள்ளார்.
ஆறு அம்ச கோரிக்கைகளை வைத்து அதில் கொஞ்சத்தினை நிறைவேற்றுவதற்கு தயாரான ஒருவரை நாம் ஆதரிக்கலாம் என்ற நிலைப்பாட்டினை எடுத்துள்ளார். என்னத்தினை சொல்லபோகின்றார்என்றால் கூட்டமைப்பு எவ்வாறு இந்தியா சொல்பவருக்கு வாக்களிக்கபோகின்றதோ அதேபோல் இந்திய சொல்வதற்கு வாக்களிக்க இவர் முடிவெடுத்துவிட்டார். 
ஆனால் எங்கள் மக்கள் புரிந்துகொள்ளாதவாறு மக்களை ஏதேஒருவகையில் நம்பவைத்து தான்சொல்கிறவருக்கு வாக்களிக்க செய்யவேண்டும் என்பதற்காக கருத்தினை சொல்லதொடங்கியுள்ளார் இந்த விடையங்களில் மக்கள் விழிப்பாக இருக்கவேண்டும்.
இந்த விடையங்களில் மக்கள் விழிப்பாக இருக்கவேண்டும் விக்னேஸ்வரன் ஜயாஅல்ல எந்த கடவுள் வந்து சொன்னாலும் கூட தமிழ்மக்கள் இந்தஜனாதிபதி தேர்தலை வைத்து பேரம் பேசுவதற்கான வாய்ப்பினை இழந்துவிடக்கூடாது

விக்னேஸ்வரன் ஜயாக இந்தியாவின் நிகழ்சி நிரலின் கீழ் செயற்படவில்லை என்றால் முல்லைத்தீவு மாவட்டத்தில் நேரடி விவாதத்திற்கு கூட்டிக்கொண்டு வாருங்கள் நேரில் கதைப்போம்.

கோத்தபாஜ றாஜபக்ச சீனாவின் ஆள் அவர் ஜனாதிபதியாக வந்தால் இந்தியாவின் தேசியபாதுகாப்பிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் இருக்கின்றது.
சீனாவினை இலங்கைக்குள் முழுமையாக சுதந்திரமாக செயற்பட அனுமதிப்பார் இந்தியா பல துண்டங்களாக சிதறிப்போகும் அளவிற்கு சீனா செயற்படக்கூடிய நிலமைகளை உருவாக்கும் இதனை இந்தியா ஒருநாளும் விரும்பாது என்ன விலைகொடுத்தாலும் கோட்டபாயறாஜபக்சவினை தோற்கடிக்கவேண்டிய தேவை இந்தியாவிற்கு உள்ளது அந்த விடையத்தில் நாங்கள் ஒத்துளைப்பதற்கு தயாராக இருக்கின்றோம்.

இந்தியாவிடம் நாங்கள் கேட்பது தமிழ்மக்கள் பேரவையின் தீர்வுத்திட்டத்தில் குறிப்பிட்டுள்ள தமிழ்தேசத்தினையும் அதன் இறைமையினையும் இந்திய நாடாளுமன்றத்தில் அங்கிகரிக்க வேண்டும் இந்த கோரிக்கையினை எல்லாமக்களும் எல்லாமட்டத்திலும் வலியுறுத்த வேண்டும்.