Take a fresh look at your lifestyle.

மன்னார் மடு திருத்தலத்தின் ஆவணித் திருவிழா!

பிரசித்தி பெற்ற தேவாலயங்களில் ஒன்றான மருதமடு அன்னையின் ஆவணித் திருவிழா இன்று (15.08.19) வெகுவிமர்சையாக நடைபெறுகின்றது.

ஈழத்தின் வட புலத்தில் மன்னார் மாவட்டத்தின் மடு – மாந்தைப் பிரதேசத்தில் வீற்றிருக்கும், மருதமடு தேவாலயத்தின் வருடாந்த உற்சவம் பல்லாயிரக்கணக்கான மக்கள் புடை சூழ இன்று நடைபெற்றுள்ளது.

மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில், இன்று காலை 6.15 மணியளவில் திருவிழா திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு திருவிழா சிறப்பாக நடைபெறுகின்றது.