Take a fresh look at your lifestyle.

1977 ஆகஸ்ட் 15 ‘ஆவணிப்படுகொலை’ தமிழர் வரலாற்றில் இருண்ட நாள்…!

தமிழருக்கெதிரான இனப் படுகொலை நடவடிக்கையான 1977
ஆவணிப்படுகொலை தொடங்கிய நாள். இனப்படுகொலையின்
பின்னர்தான் நிராயுதபாணிகளாக நின்ற தமிழர்களை நோக்கி போர்
என்றால் போர்; சமாதானம் என்றால் சமாதானம் என்று கொக்கரித்தார்
பேரினவாதி nஐயவர்த்தனா. இவ் இனவெறியில் 400 -இற்கும்
மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். 10.000 -இற்கும்
மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

ஜே.ஆர் ஜெயவர்த்த னாவின் புதிய அரசியலமைப்புச் சட்டத்தைக் கண்டித்து தமிழர்கள் அமைதிவழியில் தமது எதிர்ப்பைத் தெரிவித்து போராட்டம் நடத்தினர். அப்போது பிரதமராக இருந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தனா திட்டமிட்ட படி தமிழர்கள் மீதான இனப்படுகொலையை நெறிப்படுத்தினார். 15.08.1977 அன்று யாழ் நகரில் இடம்பெற்ற கலைநிகழ்வு ஒன்றில் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து தென்னிலங்கையிலும் தமிழர்கள் கண்மூடித்த மான முறையில் சிங்களக் காடையர்களால் தாக்கப்பட்டார்கள். 400 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். பல தமிழப்பெண்கள் பாலியல் வதைககு உள்ளாக்கப்பட்டனர். தென்னிலங்கையில் இருந்த பலகோடிப் பெறுமதியான தமிழர்களின் சொத்துக்கள் சூறையாடப் பட்டன. 40,000 தமிழர்கள் ஏதிலியானார்கள். கொழும்பிலிருந்து மூன்று கப்பல்களில் தமிழர்கள் ஏற்றப்பட்டு ஏதிலிகளாக யாழ் குடாநாட்டிற்கு அனுப்பப்பட்ட னர்.

-எரிமலை  இதழ் குறிப்புகள்.!