Take a fresh look at your lifestyle.

புல்மோட்டையில் இருபது பேர் கைது!

திருகோணமலை – புல்மோட்டை பிரதான வீதி அலஸ் தோட்டப்பகுதியில் நேற்றிரவு விபத்தை ஏற்படுத்திய மகிழுந்தை எரியூட்டிய 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த பகுதியில் வேக கட்டுப்பாட்டை மீறி பயணித்த மகிழுந்து ஒன்று முச்சக்கர வண்டியுடன் மோதுண்டுள்ளது.

இந்த அனர்த்தம் இடம்பெற்ற போது மகிழுர்ந்தின் சாரதி மது அருந்தி இருந்ததாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.இந்த விபத்து காரணமாக முச்சக்கர வண்டியில் பயணித்த 4 பேர் அடங்கலாக அறுவர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் திருகோணமலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.இதனையடுத்து, குழப்பம் அடைந்த பிரதேச மக்கள் விபத்தை ஏற்படுத்திய மகிழுர்ந்தை எரியூட்டியுள்ளனர்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை உப்புவெளி காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.