அதிகாரிகளை கண்டு ஒடிய சட்டவிரோத மணல் அகழ்வுகாரர்கள்!

breaking
முல்லைத்தீவில் சட்டவிரோ மணல் அகழ்வு மற்றும் மரம் கடத்தல்கள் தொடர்பில் புவி சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப்பணியக அதிகாரிகள் பல்வேறு இடங்களுக்கு சென்று பார்வையிட்டுள்ளார்கள். முல்லைத்தீவின் நந்திக்கடல் ஏரியில் அகழப்படும் சட்டவிரோத மணல் அகழ்வு மற்றும் புதுக்குடியிருப்பில் கிரவல் அகழ்வு,ஒட்டுசுட்டானில் கருங்கல் அகழ்வுகள் தொடர்பில் நேரடியாக சென்று பார்வையிட்டுள்ளார்கள். நந்திக்கடல் பகுதியில் சட்டவிரோ நடவடிக்கையால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பில் பார்வையிட சென்ற அதிகாரிகளின் கண்முன்னே சட்டவிரோத மணல் அகழ்வாளர்கள் மணல் கழ்வினை விட்டு தப்பிஓடும் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

 முல்லைத்தீவில் இயற்கைக்கு பாதகம் ஏற்படுத்தும் வகையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பில் ஆய்வு ஒன்றினை மேற்கொள்வதற்க்காக ஜனாதிபதி செயலக அதிகாரிகள் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் புவிச்சரியவியல் அளவியல் தலைமைப் பணியக அதிகரிகள்  உள்ளிட்டோர்  முல்லைத்தீவு- கேப்பாப்புலவு,நந்திக்கடல் கள்ளியடி மற்றும் பாவடைகல் ஆற்றுப்பகுதி ,இருட்டுமடு, மூங்கிலாறு சுதந்திரபுரம் போன்ற பகுதிகளிற்கு சென்று ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளமை  குறிப்பிடத்தக்கது.

இதன்போது நடைபெறும் சடடவிரோத நடவடிக்கைகளை கண்டு அதிகாரிகள் திகைப்படைந்துள்ளனர் அத்தோடு குறித்த பிரச்சனைகள் தொடர்ப்பில் விரிவாக ஆராய்ந்துவருகின்றனர்