சட்டவிரோத இயற்கை வள அழிவிற்கு துரித நடவடிக்கை-காதர் மஸ்தான்!

breaking
முல்லலைத்தீவு மாவட்டத்தில் இடம்பெறும் சட்டவிரோத இயங்கை வளங்கள் அழிக்கப்படுவது தொடர்பில் ஆய்வு ஒன்றினை மேற்கொள்வதற்க்காக 15.08.19 அன்று ஜனாதிபதி செயலக அதிகாரிகள் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் புவிச்சரியவியல் அளவியல் தலைமைப் பணியக அதிகரிகள் உள்ளிட்டோர் நேரடியா சென்று பார்வையிட்டுள்ளார்கள் இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் அவர்கள். முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழுக்கூட்டத்தில் மாவட்டத்தில் பல இடங்களில் சட்டவிரோத மணல் அகழ்வு,கிரவல் அகழ்வு நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த மணல் அகழ்விற்கு அனுமதி பத்திரம் கொடுப்பவர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகளை மக்களும் ஊடகவியலாளர்களும் குற்றம்சாட்டிவருகின்றார்கள். இன்னிலையில் இந்த ஆய்வினை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அதிகாரிகளை நேரடியா அழைத்துவந்து சென்றபோது நந்திக்கடல் பகுதியில் மண்அகழ்வில் ஈடுபட்டவர்கள் எங்களை கண்டு ஓடிவிட்டார்கள் இங்கு பொலீஸ் திணைக்களம் என்ன செய்கின்றார்கள் என்று தெரியவில்லை நான் வந்துபார்க்கும் போதுதான் தெரிகின்றது இதுதொடர்பில் விரைவில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் சகல அரச அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுடனும் கதைத்து எனக்கு தரப்பட்ட பொறுப்பினை சரியாக செய்வேன் என்றும் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.