Take a fresh look at your lifestyle.

கோட்டாவின் குடியுரிமை துறப்பு ஆவணங்களை வெளியிட தயார்; நாமல் அறிவிப்பு

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, தனது அமெரிக்கக் குடியுரிமையை துறந்துள்ளமைக்கான ஆவணங்களை வெளியிட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாராக உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷவின் பிரஜாவுரிமை குறித்து, அமைச்சரவை அந்தஸ்தில்லாத அமைச்சர் ஹர்ஷா டி சில்வா, டுவிட்டரில் பதிவிட்ட கருத்துக்குப் பதிலளிக்கும் வகையில் நாமல் இதனைப் பதிவிட்டுள்ளார்.

பொதுஜன பெரமுன வேட்பாளரைப் பற்றி கவலைப்பட வேண்டாம். அவரது ஆவணங்கள் தொடர்பில் பிரச்சினை என்றால், தேவைப்பட்டால் அதனை முன்வைப்போம். நீங்கள் யாரை போட்டியிட வைக்கலாம் என்று கவலைப்படுங்கள் என, நாமல் ராஜபக்ஷ டுவீட் செய்துள்ளார்.