Take a fresh look at your lifestyle.

சுதந்திரக் கட்சி தலைமையகத்துக்கு சந்திரிகா அதிரடி விஜயம்

ஸ்ரீலங்கா சுத்திரக் கட்சியின் தலைமையகத்திற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க நேற்று வியாழக்கிழமை காலை திடீர் என சென்றுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த அணியின் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டா பய ராஜபக்ஷ களமிறங்கவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஸ்ரீலங்கா சுத்திரக் கட்சியின் சில உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்து வந்தாலும், சிலர் கடும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

அதேபோன்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் கோட்டாவிற்கு எதிரான கருத்துக்களையே வெளியிட்டு வருகின்றார். இந்தநிலையிலேயே அவர் திடீர்என ஸ்ரீலங்கா சுத்திரக் கட்சியின் தலைமையகத்திற்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.