Take a fresh look at your lifestyle.

ஐ.தே.க.வின் புதிய கூட்டணி தொடர்பில் நாளை இறுதி முடிவு

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையில் மலரவுள்ள புதிய அரசியல் கூட்டணி (ஜனநாயக தேசிய முன்னணி) தொடர்பில் நாளை சனிக்கிழமை இறுதி முடிவெடுக்கப்படும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும், அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

அத்துடன், கூட்டணியை நாட்டு மக்களுக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் திகதியும் அன்றைய தினம் நிர்ணயிக்கப்படும் எனவும் அவர் கூறினார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் பங்காளிக்கட்சி தலைவர்களுக்குமிடையிலான சந்திப்பு செவ்வாயன்று இரவு அலரிமாளிகையில் நடைபெற்றது.

இதன்போது கூட்டணி விவகாரத்தை கையாள்வதற்கு உப குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர் மனோ கணேசன், செவ்வாயன்று இரவு நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அமைக்கப்பட்ட உபகுழு சனிக்கிழமை கூடவுள்ளது. இதன்போது ஜனநாயக தேசிய முன்னணி என்ற கூட்டணி தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும்.

இந்தக் கூட்டணியை நாட்டுக்கு அறிவிக்கின்ற இம்மாதத் திகதியும் தீர்மானிக்கப்படும். தீர்மானிக்கப்படும் தினத்தன்று, கூட்டணி ஆவணத்தில் பங்காளி கட்சித் தலைவர்கள் கையயழுத்திடுவதும், கூட்டணி ஜனாதிபதி வேட்பாளர் பெயர் அறிவிப்பும் ஒருசேர நடைபெறும். என்று கூறினார்.