புதிய அரசியல் அமைப்பு யாப்பு மூலம் தமிழ்மக்களுக்கு அதிகாரத்தினை பெற்றுக்கொடுக்குமாறு TNA கோரிக்கை!

breaking
ஜனாதிபதித் தேர்தல் ஒன்றை நடாத்த விடாது தடுத்து, புதிய அரசியல் யாப்பொன்றின் மூலம் வடக்கு, கிழக்கு மக்களுக்கு அதிகாரத்தைப் பெற்றுத் தருமாறு இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்குமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர் ஆர். சம்பந்தன் ஐரோப்பிய ஒன்றிய தூதுக் குழுவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு மக்கள் நூற்றுக்குத் 90 வீதம் புதிய அரசியலமைப்பைப் பெற்றுத் தருவதாக கூறியதற்கே இந்த அரசாங்கத்துக்கு வாக்களித்தனர். இதனால், ஐரோப்பிய ஒன்றியம் தமது அதிகாரத்தைப் பிரயோகித்து இந்த ஜனாதிபதித் தேர்தலை நிறுத்திவிடுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு பிரதானி ரிகாடோ செல்லெறி தலைமையிலான தூதுக் குழுவுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இந்த அரசாங்கம் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையைக் கூட நீக்கவில்லை எனவும் புதிய அரசியலமைப்பு அமைக்கும் பணியை அரசாங்கம் ஒத்திவைத்துள்ளதாகவும் ஆர். சம்பந்தன் எம்.பி. மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.