Take a fresh look at your lifestyle.

தமிழர்களை கொன்றவர் இராணுவத்தளபதியாக பதவி உயர்வு .!

புதிய இராணுவத் தளபதியாக  இனப்படுகொலையாளர் சவேந்திர சில்வா நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிங்கள இராணுவத் தளபதி   மகேஸ் சேனநாயக்க நாளையுடன்(ஞாயிற்றுக்கிழமை) ஓய்வு பெறவுள்ளார்.

இவ்வாறு அவர் ஓய்வு பெற்றால்,  சிங்கள பேரினவாத இராணுவத்தைச் சேர்ந்த இரண்டு மூத்த அதிகாரிகள் இராணுவத் தளபதிக்கான போட்டியில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது சிங்கள இராணுவத் தலைமை அதிகாரியாக இரண்டாவது இடத்தில் உள்ள  சவேந்திர சில்வா மற்றும் சத்யப்பிரிய லியனகே ஆகியோரே இவ்வாறு போட்டியிடுகின்றனர்.

இந்தநிலையில் குறித்த பதவிக்கு  சவேந்திர சில்வாவே நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த ஜூலை மாதமே ஓய்வு பெற்றிருக்க வேண்டிய மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆறு மாத சேவை நீடிப்பை வழங்கியிருந்தார்.

இராணுவத்தில் இரண்டாவது நிலை அதிகாரியாக இருக்கும்  இனப்படுகொலையாளர் சவேந்திர சில்வா, இறுதிப் போரில் சர்ச்சைக்குரிய 58 ஆவது பிரிவின் கட்டளை அதிகாரியாக இருந்தவர்.

இதன்போது அவர் போர்க் குற்றங்களில் ஈடுபட்டதாக ஐ.நா.வும் மனித உரிமை அமைப்புக்களும் தொடர்ச்சியாக குற்றஞ்சுமத்தி வருகின்றன.

இதற்கு முன்னர் இராணுவத் தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டமையினைத் தொடர்ந்து பல்வேறு சர்வதேச அமைப்புகள் கடும் எதிர்ப்பினை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.