வடக்கிற்கு பயணம் மேற்கொண்டுள்ள ஜ.நா அதிகாரி!

breaking
ஸ்ரீலங்காவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள ஜக்கியநாடுகள் சபையின் மத அல்லது நம்பிக்கைச் சுதந்திரம் தொடர்பான ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் அகமட் கீட். வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு அகதிகளை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார் உயிர்த்த ஞாயிறுதினத்தில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலையடுத்து நீர்கொழும்பில் தங்கியிருந்த ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு அகதிகள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டிருந்தனர். அவர்களில் ஒரு தொகுதியினர் மூன்று கட்டங்களாக வவுனியா பூந்தோட்டம் பகுதியில் உள்ள புனர்வாழ்வு நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு தங்க வைக்கப்பட்டனர். இவ்வாறு தங்க வைக்கப்பட்டவர்களை பார்வையிட்ட ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் அவர்களது தற்போதைய நிலை தீவிரவாத தாக்குதலின் பின்னரான நிலமைகள் மற்றும் அவர்களது பிரச்சனைகள் தொடர்பில் கலந்துரையாடினார். இதன் பின்னர் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண் ஜ.நா தூதுவர் முல்லைத்தீவின் நீராவியடிப்பிள்ளையார் இடத்தில் ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரை மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெறும் மத ஆக்கிரமிப்புக்ககள் தொடர்பில் ஆராய்ந்துள்ளார்.