ஈஸ்டர் ஞாயிறு குண்டு தாக்குதலுக்கு இதுவே கரணம்.?

breaking
உளவுத்துறை தகவல்களை பொலிஸ் பிரிவுக்கு வழங்கத் தவறியதே ஈஸ்டர் ஞாயிறு குண்டு தாக்குதலுக்கு கரணம் என முன்னாள் பொலிஸ் மா அதிபர் என்.கே.இளங்ககோன் தெரிவித்துள்ளார். ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து ஆராயும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு  நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் கூடியது. இந்த அமர்வில் உயர்நீதிமன்ற நீதியரசர் விஜித் மலல்கொட, முன்னாள் அமைச்சின் செயலாளர் பத்மசிறி ஜயமான்ன மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் என்.கே.இளங்ககோன் ஆகியோர் முன்னிலையாகி சாட்சியம் வழங்கினர். இதன்போது சாட்சியம் வழங்கிய முன்னாள் பொலிஸ் மா அதிபர் என்.கே.இளங்ககோன், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு வழிவகுத்த குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு பொலிஸ் குழுவை நியமிக்க தான் பரிந்துரை செய்ததாகவும் கூறினார். அமைச்சர் ரவி கருணநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த முன்னாள் பொலிஸ் மா அதிபர் , ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர் உளவுத்துறையின் குறைபாடுகளே தாக்குதலுக்கு காரணம் என்பதை ஒப்புக் கொண்டார். அத்தோடு இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க குழுவின் அறிக்கையில் பல பரிந்துரைகள் முன்மொழியப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்