தமிழர்களின் விடுதலைபோராட்டத்தை அழித்த அகாஷி!

breaking
தமிழீழ விடுதலைப்புலிகள் ஆயுதபலம்கொண்டு மக்களின் விடிவிற்காக போராட்டத்தினை முன்னெடுத்த போது அவர்களின் ஆயுதபலத்தினை உடைத்தொறியும் நோக்கில் சிங்கள பேரினவாதம் சமாதான பேச்சுக்களை முன்னெடுத்து அதன் ஊடாக விடுதலைப்புலிகளையும் தமிழர்களின் போராட்டத்தினையும் பலவீனப்படுத்தி சிங்கள ஆதிக்க வெறியர்களின் பலத்தினை மேலோங்க செய்த சூழ்சி தாரர்களில் ஒருவராக சமாதான வேடம் அணிந்து வந்த யப்பான் நாட்டின் தூதுவர் இன்று ஸ்ரீலங்காவிற்கு பயணம் மேற்கொண்டு துரோக கும்பல்களை சந்தித்து வருகின்றார். அன்று சிங்கள ஆட்சியாளர்களுக்கு விடுதலைப்புலிகளின் தலைமை ஒன்றையும் நம்பாது என்றும் உலக நாடுகளுக்கும் விடுதலைப்புலிகள் ஒன்றுக்கும் இணங்காவில்லை என்ற கருத்தினை இரகசியமாக சொல்லிவந்த சம்மந்தன் இன்றும் மக்கள் பிரதிநிதிகள் என்று தமிழர்களுக்கு துரோகம் இழைத்து தங்கள் அரசியல் வாழ்கையினை கொண்டுசெல்கின்றார்கள். சந்திரிக்காக ஆட்சியிலும் மகிந்த ஆட்சியிலும் குண்டுதுளைக்காத வாகனத்தில் சென்ற தமிழ்மக்கள் பிரதிநிதிகளாக இவர்கள் இன்றும் காணப்படுகின்றார்கள். இன்னிலையில் 2009 வரை பேச்சுவார்த்தை என்று எதுவும் எட்டப்படாமல் இழுத்தடிப்பு செய்து விடுதலைப்புலிகளையும் மக்களையும் அழித்துவிட்டு அதன் பெருமையினை தற்போது உள்ள சிங்கள அரச அதிபரிடம் பெற்றுக்கொண்டு உலாவருகின்றார் யசுசிஅகாசி போர் முடிவிற்கு கொண்டுவருவதில் சர்வதே சமூகம் பாரிய பங்காற்றியுள்ளது என்று தமிழ்மக்களின் பிரதி நிதியாக இன்று காணப்படும் இரா.சம்மந்தன் அகாசியிடம் தெரிவித்துள்ளமையானது அன்று விடுதலைப்புலிகளையும் மக்களையும் சிங்கள தேசம் அழிக்கும் போது அதற்கு துணைபேனவர்கள் என்ற பெருமைகொள்ளும் மக்கள் பிரதிநிதிகளாகவே இன்றும் காணப்படுகின்றார்கள்.